- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெற்றிகரமான வாழ்க்கை வாழ

வெற்றிகரமான வாழ்க்கை வாழ

- Advertisement -

மே மாதம் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சித்திரை மாதத்தின் சுவாதி நட்சத்திரம் வருகிறது. அன்றைய நாளில்தான் நரசிம்மர் அவதரித்தார் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நரசிம்மர் அவதரித்த நாளில் நரசிம்மரை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்யும் பொழுது சிறப்பான முறையில் பிரம்மாண்டமாக செய்வதை காட்டிலும் மிகவும் எளிமையான முறையில் நாம் செய்யக்கூடிய வழிபாடு நரசிம்மரின் அருளை முழுமையாக பெறச் செய்யும். அந்த ஒரு எளிமையான வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.

ஆயிர கணக்கில் செலவு செய்து பிரம்மாண்டமாக நாம் செய்யக்கூடிய எந்த வழிப்பாடாக இருந்தாலும் அந்த வழிபாட்டை விட மிகவும் எளிமையாக ஆத்மார்த்தமாக செய்யக்கூடிய வழிபாட்டிற்கு பலன் அதிகம் என்று கூறப்படுகிறது. அதனால் தான் பிரகலநாதன் நாராயணா என்று கூறிய அந்த ஒரு வார்த்தைக்காக தூணில் இருந்து வெளிவந்த அவதார புருஷனாக திகழ்பவர் தான் நரசிம்மர். அதனால் நரசிம்ம ஜெயந்தி அன்று மிகவும் எளிமையான முறையில் நாம் நரசிம்மரை வழிபாடு செய்து நரசிம்மரின் அருளைப் பெறலாம்.

- Advertisement -

நரசிம்மரை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. அந்த கஷ்டங்கள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக எது இருக்கிறதோ அது அனைத்தும் விலகும் என்றும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக எதிரிகள் மற்றும் துரோகிகளின் பிரச்சனைகளில் இருந்து வெளியே வர முடியும் என்றும் அதன் மூலம் வெற்றிகரமான சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த வாழ்க்கை வாழ்வதற்கு நாம் நரசிம்மர் ஜெயந்தி அன்று மாலை 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் வீட்டு பூஜை அறையில் நரசிம்மரை நினைத்து ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு நரசிம்மருக்கு பானகத்தை நெய்வேத்தியமாக வைத்து பின்வரும் இந்த ஒரு பாடலை மனம் உருகி மனதார கூற வேண்டும்.

- Advertisement -

பாடல்

கோபமும் வீரமும் பிரகாசமும் கொண்ட மகாவிஷ்ணுவின் அவதார நரசிம்மரே,
எல்லா திசைகளையும் பார்த்துக் கொண்டு இருக்கும் உன்னிடம் இருந்து தவறுகள் செய்பவர் யாராலும் தப்பிக்க முடியாது,எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும் காட்டி எல்லாமும் நீயாக இருக்கின்றாய்,
உன்னை மனதார வணங்குகிறேன்.

- Advertisement -

மனதார மேற்சொன்னை இந்த பாடலை ஒரே ஒருமுறை மட்டும் கூறிவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிடலாம். இந்த முறையில் நாம் நரசிம்மரை இன்றைய தினம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய எதிரிகள் மற்றும் துரோகிகள் அனைவரும் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள். வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே:சொந்த வீடு கட்ட குலதெய்வ பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த நரசிம்மர் வழிபாட்டை முழுமனதோடு செய்பவர்களுக்கு நரசிம்மரின் அருளால் வெற்றிகள் அவர்களை தேடி வரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்