அந்த காலத்தில் கடன் என்ற வார்த்தையை சொன்னால் பயம் இருக்கும். கடன் வாங்க கூடாது. கடன் வாங்கினால் அவமானம் என்ற பெயர் இருந்தது. ஆனால் இன்று கடனில் தான் உலகமே இயங்குகிறது. சின்ன பெட்டிக்கடை வைத்திருந்தால் கூட சரி, அந்த இடத்தில் 10 ரூபாய்க்கு பொருள் வாங்குபவர்கள் கூட கடன் சொல்லுகிறார்கள். பத்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட் கொடுங்க, நாளைக்கு பணம் தரேன். பத்து ரூபாய்க்கு காபித்தூள் பாக்கெட் தாங்க. நாளைக்கு பணம் தருகிறேன். இப்படி சில்லறை வியாபாரத்திலும் சின்ன சின்ன கடன்.
ஓரளவுக்கு வசதி வாய்ப்போடு ஒரு டெய்லர் கடை, ஹோட்டல் கடை அல்லது பேன்சி ஸ்டோர் இதுபோல ஏதாவது வியாபாரம் நடத்தக்கூடிய இடத்திலும் கடன் இருக்கிறது. மளிகை கடைகளில் கூட மாதம் முழுவதும் பொருட்களை வாங்கிவிட்டு, மாதத்தில் முதல் தேதி சம்பளம் வந்தவுடன் கடனை கொடுப்பார்கள். இப்படி எல்லா இடத்திலும் கடன் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க நம்முடைய வீட்டிலிருந்தும் சில பேருக்கு கடனாக பணத்தை கொடுத்து இருப்போம்.
தெரிந்தவர்கள் உறவுகள் என்று வந்து கடன் கேட்பார்கள், நம்முடைய பணத்தையோ, நகையோ அவர்களுக்கு உதவிக்காக கொடுத்திருப்போம். அதுவும் திரும்பவும் நம் கைக்கு வந்த பாடாக இருக்காது. பெரிய தொழில் அதிபராக இருப்பார்கள், அவர் கோடி கணக்கில் மாதம் பணத்தை தொழிலில் முதலீடு செய்து, டர்ன் ஓவர் செய்வாங்க. அவங்களுக்கும் அவங்க தகுதிக்கு ஏற்றபடி கடன் இருக்கும். இதுபோல உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எந்த பிரச்சினையை சந்தித்தாலும் சரி, நீங்கள் கடன் கொடுத்து விட்டு, ஏமாந்து நிற்கிறீர்கள் என்றால் இந்த பரிகாரம் உங்களுக்காக.
கொடுத்த கடன் மீண்டும் வசூலாக பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு முதலில் தேவைப்படக்கூடிய பொருள் வெட்டிவேர். வெட்டிவேரை வாங்கி கொஞ்சம் பன்னீரில் ஊற வைத்து ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு, பூஜை அறையில் வைக்க வேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய பூஜை அறையிலும் இந்த வெட்டிவேரை கிண்ணத்தில் போட்டு வைக்கலாம், அல்லது தொழில் செய்யும் கடையிலும் இந்த வெட்டிவேரை கிண்ணத்தில் போட்டு சுவாமியின் படத்திற்கு முன்பாக வைக்கலாம்.
அந்த வெட்டிவேர் கிண்ணத்தில் கொஞ்சமாக பச்சைக் கற்பூரத்தை தூள் செய்து போட்டு விடுங்கள். இதற்கு தினமும் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு ஊதுவத்தியை இந்த வெட்டிவேருக்கு காண்பிக்க வேண்டும். குலதெய்வத்தை மனதார நினைத்து உங்களுக்கு வரவேண்டிய பணம் உங்கள் கையை வந்து சேர வேண்டும் என்று நன்றாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
ஓம் அனுகிரஹா, தாராதேவி, காரிய சித்தி தேவதா, ஜெய தேவதா, சகல காரிய சித்தியும் அனுக்கிரஹம் குரு குரு ஸ்வாஹா !
ஊதுவத்தி காண்பித்துக் கொண்டே குலதெய்வத்தை வேண்டி முடித்துவிட்டு இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லுங்கள். அவ்வளவுதான். பிறகு உங்களுடைய வேலையை துவங்கலாம். 48 நாள் தொடர்ந்து அந்த வெட்டி வேருக்கு பூஜை செய்து இந்த மந்திரத்தை சொல்லும்போது, உங்களுக்கு வர வேண்டிய பணம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வசூலாகி துவங்கிவிடும்.
48 நாட்களுக்கு மேல் அந்த வெட்டிவேரில் வாசம் கொஞ்சம் குறைந்திருந்தால் பழைய வெட்டிவேரை கால் படாத இடத்தில் போட்டு, புது வெட்டிவேரை மாற்றி வைக்கலாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் ஏமாந்து இருந்தால், அடுத்தவர்களிடம் கடனாக கொடுத்த பணம், வசூலாக இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: முருகனுக்கு மாவிளக்கு பரிகாரம்
எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும், எத்தனை நாட்கள் வராமல் நிலுவையில் இருந்த பணமாக இருந்தாலும், கூடிய விரைவில் அந்த பணம் உங்கள் கையை வந்து சேரும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக அமையும் என்று இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.