நம்பிக்கையின் பெயரில் கடனாக கொடுத்து, நீங்கள் ஏமாந்த உங்கள் சொந்த பணத்தை, திரும்பவும் மீட்டெடுக்க வேண்டுமா. இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்காக தான். ஏதோ ஒரு கெட்ட நேரம், என்னுடைய பணம் சொத்தை நான் இழந்து விட்டேன். நியாயமாக அந்த சொத்தும் பணமும் மீண்டும் என்னுடைய கைக்கு திரும்பவும் வரவேண்டும் என்று நினைத்தாலும் இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்காகத்தான். நியாயமாக உங்கள் பணம் உங்கள் சொத்தை நீங்கள் இழந்து இருந்தால், அதை திரும்பவும் மீட்டெடுப்பதற்கு இந்த வழியை நீங்கள் முயற்சி செய்யலாம்
கடனாக பணத்தை கொடுத்துவிட்டு, நம்முடைய அவசர தேவைக்கு அந்த பணத்தை மீண்டும் பெற முடியாமல் அவதிப்படுபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். நம்முடைய பணம் நம்முடைய தேவைக்கு இல்லை எனும் போது, ஒரு கோபம் வரும் பாருங்க. அதை வார்த்தையால் சொல்ல முடியாது. சரி விடுங்க. நேரமும் காலமும் உங்கள் பணத்தை உங்களிடம் இருந்து பறித்து விட்டது.
மீண்டும் அந்த பணத்தை உங்கள் கைக்கே வரச் செய்ய என்ன செய்வது. கைநீட்டி கடன் வாங்கியவரே மனம் மாறி ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் அந்த பணத்தை திருப்பித் தருகிறேன் என்று சொல்லுவார்கள். இந்த கருப்பு மை பரிகாரத்தை நம்பிக்கையோடு நீங்கள் செய்தால்.
கொடுத்த கடனை மீண்டும் பெற பரிகாரம்
இதற்கு முதலில் ஒரு கட்டி கற்பூரம் வாங்கிக் கொள்ளுங்கள். மெழுகு கற்பூரம் பயன்படுத்தக்கூடாது. கொஞ்சம் பெரிய அளவில் இருக்கும் கட்டி கற்பூரத்தை ஒரு பெரிய தாம்பூல தட்டில், அகல் விளக்கு மேல் வைத்துக் கொள்ள வேண்டும். குலதெய்வத்தை மனதார நினைத்து கற்பூரத்தை பொருத்தி விடுங்கள். எரிக்கின்ற சூடத்திடம் உங்களுடைய பிரச்சனையை சொல்ல வேண்டும்.
அதாவது இன்னாரிடம் இவ்வளவு தொகை கொடுத்து, இத்தனை நாட்கள் ஆகிவிட்டது. அந்த பணம் மீண்டும் என் கைக்கே வரவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு சுரேஷிடம் கொடுத்த ஒரு லட்ச ரூபாய் கடன் சீக்கிரம் எனக்கு திரும்ப கிடைக்க வேண்டும். இப்படி வேண்டிக் கொள்ளவும்.
நீங்கள் யாரிடம் பணத்தை கொடுத்தீர்களோ, அந்த நபரின் நபரின் பெயரைச் சொல்லி இந்த பிரார்த்தனையை வையுங்கள். கற்பூரம் எரிந்து கொண்டே இருக்கட்டும். மீண்டும் ஒரு பெரிய தாம்பூல தட்டை அந்த கற்பூர தீபச்சுடரில் காட்டுங்கள். தாம்பூல தட்டுக்கு உள்பக்கம் கற்பூர நெருப்பில் பட வேண்டும். அப்போது கற்பூரம் நெருப்பிலிருந்து புகை வந்து, அந்த தாம்பூல தட்டில் கருப்பாக படியும் அல்லவா. அந்த கருப்பு கரியை தான் மையை சேகரிக்க வேண்டும்.
ஐந்து நிமிடம் தொடர்ந்து இந்த கற்பூரம் நெருப்பில், ஒரு தட்டை காண்பித்தால் அந்த தட்டு மேலே கரி படிந்து கிடைக்கும். அதை எல்லாம் சேகரித்து ஒரு சின்ன டப்பாவில் போட்டு, கொஞ்சம் நெய் விட்டு கலந்தால் வசிய மை தயார். இது தவறான வசிய மை கிடையாது. இந்த வசிய மையை தினம் தோறும் நெற்றியில் வைத்து “ஸ்ரீம்” என்ற மகாலட்சுமி பீஜ மந்திரத்தை சொல்லி உங்கள் பணம் மீண்டும் உங்கள் கைக்கு திரும்ப வேண்டும் என்று தினமும் வேண்டுதல் வைத்து பாருங்கள்.
48 நாட்களில் உங்களிடம் யார் கடனாக பணத்தை வாங்கினாங்க, அவங்களை அந்த பணத்தை வந்து திருப்பிக் கொடுக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இதை பின்பற்றி பலன் பெறவும்.
இதையும் படிக்கலாமே: ராம நவமி ஸ்பெஷல் கோசம்பரி செய்யும் முறை
நீண்ட நாள் உங்களை ஏமாற்றி வருபவர்கள் கூட, மனம் மாறி அந்த பணத்தை கொண்டு வந்து தானாக உங்கள் கையில் ஒப்படைப்பார்கள். பணம் வாங்கி ஆளு எஸ்கேப். எங்கேயோ ஓடிப் போயிட்டாங்க. 10 வருஷம் ஆச்சு, அப்படின்னாலும் இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்யுங்கள். அந்த பணம் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இருக்கு.