எப்போதோ கொடுத்த பணம், நகை, சொத்துக்கள் கூட உங்களுக்கு திரும்ப வர இதை வீட்டில் எரித்தால் போதுமே!

money-thaniya

ஒருவரிடம் நாம் கொடுத்த பணம், நகை, சொத்துக்கள் போன்ற விஷயங்கள் சில சமயங்களில் நமக்கு திரும்ப வருவதில்லை. ஒருவரிடம் நாம் நம்பி கொடுத்த பணம் திரும்ப வரவில்லை என்றால் நம் மீது நமக்கே கோபம் வரும். தவறான நபரிடம் கொடுத்து விட்டோமோ! என்கிற மன உளைச்சல் நம்மை படாதபாடு படுத்தி எடுத்துவிடும்! இதிலிருந்து மீள என்ன பரிகாரம் செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

money4

வருடக்கணக்கில் இழந்த பொருட்களையும், பணத்தையும், சொத்துக்களையும் மீட்க நல்ல ஒரு பரிகாரமாக இது அமையும். நீங்கள் என்றோ, எப்போதோ கொடுத்த பணம் திரும்ப வரவில்லை என்று பலமுறை அவர்களிடம் கேட்டு பார்த்திருக்கலாம்! அது போல பெண்கள் சில பேரை நம்பி தங்களுடைய நகைகளைக் கொடுத்து ஏமாந்து போய் இருக்கலாம். வராத பணம் வசூலாகவும், இழந்த பொருட்கள், ஏமாற்றி வாங்கிய சொத்துக்கள் போன்றவற்றை மீட்கவும் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

ஒரு மண் சட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான பச்சை கற்பூரம் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை கற்பூரம் என்பது சாதாரண கற்பூரம் போன்றது அல்ல! அது வித்தியாசமாக இருக்கும். நாட்டு மருந்து கடைகளில் 30 ரூபாய்க்குக் கூட கிடைக்கும் பச்சை கற்பூரத்தின் மகத்துவம் பலருக்கும் தெரிவதில்லை.

pachai-karpooram1

ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் அந்த அறையில் முழுக்க தெய்வீக மணம் கமழும். அதனை மண் சட்டியில் போட்டு எரித்தால் பத்து நிமிடத்தில் சாம்பலாகிவிடும். மண் சட்டியில் கரி பிடித்திருக்கும். அந்த கருப்பு கரியை எடுத்து ஒரு வெள்ளை பேப்பரில் உங்களுடைய எதிரியின் பெயரை அதாவது உங்களுக்கு யாரிடமிருந்து பணம் அல்லது நகை அல்லது சொத்துக்கள் வர வேண்டுமா? அவர்களின் பெயரை அதில் எழுத வேண்டும். வலது கை மோதிர விரலால் இந்த பெயரை எழுதுங்கள்.

அதன் பின்னர் அந்த பேப்பரை அதே சட்டியில் வைத்து அதன் மீது சிறிதளவு தனியா விதைகளை போடுங்கள். கொத்தமல்லி விதைகளுக்கு வராத பணத்தை வசூலித்து கொடுக்கும் ஆற்றல் உண்டு என்று தாந்த்ரீக பரிகார குறிப்புகள் கூறுகின்றன. பின்பு பேப்பரை எரித்து விட வேண்டும். மல்லி விதைகள் எந்த அளவுக்கு எரிந்து இருக்கிறதோ அந்த அளவிற்கு சீக்கிரமாகவே நீங்கள் இழந்த பொருள், பணம், நகை அத்தனையும் மீட்டு எடுத்து விடலாம்.

gold3

பெரிதாக இதில் செலவு ஒன்றும் செய்யத் தேவையில்லை! சில தாந்த்ரீக பரிகாரங்கள் நம்பிக்கையுடன் செய்யும் பொழுது தான் பலனளிக்கும். இப்படி செய்தால் நடக்குமா? என்று யோசித்தால் எதுவும் நடப்பதில்லை. நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் செய்வது தான் முழு பலனை கொடுக்கும்.