- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவளங்களை சேர்க்கும் மாத சிவராத்திரி வழிபாடு

வளங்களை சேர்க்கும் மாத சிவராத்திரி வழிபாடு

- Advertisement -

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மகா சிவராத்திரி எந்த அளவுக்கு விசேஷமான ஒரு சிவராத்திரி ஆக திகழ்கிறதோ அதேபோல்தான் ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய மாத சிவராத்திரியும் சிவபெருமானை வழிபாடு செய்வதற்குரிய நாளாகவே கருதப்படுகிறது. ஆனால் பலரும் மாத சிவராத்திரியில் பெரிதும் வழிபாடு செய்வது கிடையாது. ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய சிவராத்திரி அன்று சிவபெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பிறவா நிலை ஏற்படும் என்றும் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான நன்மைகளையும் சிவபெருமான் அருள்வார் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மாத சிவராத்திரியில் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வளங்களை சேர்க்கும் வழிபாடு

ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி வியாழக்கிழமை மாத சிவராத்திரி வருகிறது, அன்றைய நாளில் குரு புஷ்ய யோகமும் இருக்கிறது. இந்த சிறப்பு மிகுந்த நாளில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது குருவருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். சிவபெருமானை ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய மாத சிவராத்திரி நாளில் வழிபாடு செய்யும்பொழுது பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்றாலும் வியாழக்கிழமையோடு குரு புஷ்ய யோகத்தோடு சேர்ந்து வரக்கூடிய சிவராத்திரியில் வழிபாடு செய்யும்பொழுது வழிபாட்டிற்குரிய பலன் பல மடங்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வழிபாட்டை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் சிவபெருமானுக்கு முன்பாக ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நேராக வீட்டிற்கு வெளியே வந்து வானத்தை பார்த்தவாறு இரண்டு கைகளையும் கூப்பி தலைக்கு மேல் தூக்கி “ஓம் சிவாய நம” என்னும் சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரத்தை 11 முறை கூற வேண்டும். பிறகு திரும்பவும் வீட்டு பூஜை அறைக்கு வந்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி விரதத்தை தொடங்க வேண்டும்.

அன்றைய தினம் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. ஒருவேளை உடல் சூழ்நிலை காரணமாக விரதம் இருக்க இயலாதவர்கள் வழிபாட்டை மட்டும் செய்து கொள்ளலாம். மாலை 6:00 மணிக்கு வீட்டில் இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கு பால், இளநீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதேபோல் காய்ச்சிய பசும்பால், ஏதாவது இனிப்பு, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றை நெய்வேத்தியமாக வைத்து வழிபாட்டை செய்ய வேண்டும். இவை எதுவுமே இல்லை என்றால் ஒரு டம்ளர் தண்ணீரையாவது நெய்வேத்தியமாக வைத்து வழிபாட்டை தொடங்க வேண்டும்.

- Advertisement -

வாசனை மிகுந்த மலர்கள், வில்வ இலைகள் போன்றவற்றை பயன்படுத்தி சிவபெருமானின் “ஓம் மகா தேவாய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி வீட்டில் இருக்கக் கூடிய சிவ பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அன்று இரவு முழுவதும் கண்விழித்து சிவ வழிபாட்டை மேற்கொள்ளலாம். இயலாதவர்கள் இரவு 12 மணி வரை கண்விழித்து சிவபெருமானை வழிபாடு செய்யலாம்.

மறுநாள் காலை 6:00 மணிக்கு திரும்பவும் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து இதே மந்திரத்தை கூறி 108 முறை அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். இப்படி விரதம் இருந்து வழிபாடு செய்ய இயலாது என்பவர்கள் சிவராத்திரி நாளன்று மாலை 6:00 மணிக்கு மேல் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்வதும் அன்றைய தினம் வறுமையால் வாடுபவர்களுக்கு அன்னதானம் செய்வதும் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை தரும்.

இதையும் படிக்கலாமே: கோடீஸ்வர யோகத்தை தரும் குரு அருள்

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மகா சிவராத்திரிக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறோமோ அதே அளவிற்கு மாதா மாதம் வரக்கூடிய சிவராத்திரிக்கும் முக்கியத்துவம் கொடுத்து யார் ஒருவர் சிவபெருமானை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு சிவ அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்