இன்று அதிக மக்களின் கவலையே வாங்கிய கடனை எப்படி திருப்பி அடைப்பது என்பதுதான். ஒவ்வொரு நாளும் ஓடி ஓடி சம்பாதித்து நல்ல முறையில் வாழ்கிறார்களோ இல்லையோ வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும் இஎம்ஐ கட்டவும் தான் சரியாக இருக்கிறது. கடன் தொல்லை இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்வது எத்தனை சுகமான ஒன்று தான். அப்படி ஒரு வாழ்க்கையை வாழ தினமும் ஒரு டம்ளர் தண்ணீரை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
தண்ணீர் பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு வீட்டின் அருகில் அசோக மரம் எங்காவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த மரத்தை வைத்து தான் பரிகாரம் செய்ய வேண்டும். அப்படி ஏதும் இல்லாத பட்சத்தில் சின்னதாக ஒரு அசோக மரக்கன்றினை தொட்டியில் வாங்கி வீட்டில் வைத்து விடுங்கள்.
காலையில் எழுந்து குளித்து முடித்ததும் பூஜை அறையில் ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரை வைத்த பிறகு தீபம் ஏற்றி கடன் தீர வேண்டும் என்று குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை முதலில் வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த தண்ணீரை உங்கள் கையில் எடுத்துக்கொண்டு நீங்கள் எந்த கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்களோ அதை சொல்லி அந்த பிரச்சனை எனக்கு விரைவாக தீர வேண்டும் அந்த கடன் முழுவதுமாக அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு இந்த தண்ணீரை அசோக மரக்கன்று அல்லது அசோக மரத்திலும் ஊற்றி விடுங்கள்.
இதை தினமும் தொடர்ந்து செய்ய வேண்டும். இப்படி ஒரு டம்ளர் தண்ணீரை வைத்து வணங்கிய பிறகு அந்தத் தண்ணீரை சூரிய பகவானை பார்த்து சூரிய நமஸ்காரம் செய்த பிறகு அவருக்கு நாம் அபிஷேகம் செய்வதுபோல் இந்த தண்ணீரை கீழே கொட்ட வேண்டும். அப்பொழுது “ஓம் சூர்யாய நமக” என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய கடன் விரைவில் அடைவதுடன் மீண்டும் மீண்டும் கடன் வாங்காமல் வீண் விரயங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பது போன்றவைக்கு எல்லாம் ஒரு நல்ல எளிய பரிகாரமாக இது திகழும்.
இந்த இரண்டு வழிபாட்டையும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நம் வாழ்வில் இருக்கும் கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி கடன் இல்லா வாழ்க்கையை வாழ்வதுடன் வீண் விரையங்கள் ஏற்படாமல் கையில் பணம் செழிப்பாக புரளும்.
இதையும் படிக்கலாமே: முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்க
கடன் அடைய இந்த பரிகாரத்தை செய்வதோடு கடன் வாங்குவதற்கான சூழ்நிலையை முடிந்த வரையில் நாம் உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது என்ற தகவலை கூறி இந்த பதிவினை இத்துடன் நிறைவு செய்து கொள்கிறோம்.