நியூசிலாந்து தொடருக்கு முன் ஒரு நாள் விடுப்பு எடுத்த கோலி. எங்கு சென்றிருக்கிறார் தெரியுமா ? அதுவும் இவருடனா ?

kohli

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடு கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகிய அனைவரும் இந்திய அணியை சமூக வலைத்தளம் வாழ்த்திய படி உள்ளனர்.

indian-team

இந்திய அணிக்கான அடுத்த சுற்றுப்பயணம் நியூசிலாந்து. இன்று இரவு அல்லது நாளை காலை இந்திய அணி ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வாரும் 23ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நியூசிலாந்து செல்ல தயாராகும் அணியில் இருந்து இன்று ஒருநாள் விடுப்பு எடுத்துள்ளார் கேப்டன் கோலி . விடுப்பு எடுத்த கோலி தனது மனைவியுடன் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை காண சென்றுள்ளார். மேலும் ரோஜர் பெடரர் உடன் புகைப்படம் எடுத்து அதனை தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு :

இன்னும் 4 நாட்களில் இந்திய அணியின் அடுத்த ஒருநாள் தொடர் துவங்க இருக்கிறது. நியூசிலாந்தில் இந்திய அணி தனது ஆதிக்கத்தை செலுத்துமா என்று சில நாட்களில் தெரிந்துவிடும்.

இதையும் படிக்கலாமே :

நான் அவ்வளவு சீக்கிரம் ஓய்வினை அறிவிக்கமாட்டேன் என்று கூறி பந்தை பயிற்சியாளரிடம் தந்த தல தோனி – வைரல் வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்