நான் அவ்வளவு சீக்கிரம் ஓய்வினை அறிவிக்கமாட்டேன் என்று கூறி பந்தை பயிற்சியாளரிடம் தந்த தல தோனி – வைரல் வீடியோ

msd

நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடருக்கு முன்வரை கடந்த 2018ஆம் ஆண்டு முழுவதும் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை என்ற பேச்சுகள் தோனியை சுற்றிவலம் வந்தது. ஆனால், தோனியின் அனுபவம் மற்றும் பினிஷிங் மீது அசாத்திய நம்பிக்கை கொண்ட கேப்டன் கோலியும், இந்திய அணி நிர்வாகமும் அணியில் தோனியை தொடர்ந்து விளையாட வைத்தனர்.

dhoni

ஜனவரி மாதம் 2019 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் விளையாட ஆஸ்திரேலியா வந்தார் நம்ம தல தோனி. இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் அவரது கடைசி சுற்றுப்பயணம் ஆகும். விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் அரைசதம் அடித்து அசத்தினார். மேலும், கடைசி இரு ஆட்டங்களை இந்திய அணிக்கு வெற்றியினை தேடித்தந்தார். அதோடு தொடர்நாயகன் விருதினையும் கைப்பற்றினார்.

கடைசி ஆட்டத்தினை வெற்றிகரமாக முடித்த தோனி கையில் பந்தினை எடுத்துவந்தார். அப்போது எதிரில் வந்த பேட்டிங் பயிற்சியாளரரான சஞ்சய் பங்கரிடம் அந்த பந்தை கொடுத்து, இந்த பந்தை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். நான் அவ்வளவு எளிதில் ஓய்வினை அறிவிக்கமாட்டேன் என்று கூறினார். இந்த நிகழ்வு வீடியோவாக இணையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக :

டெஸ்ட் போட்டியில் ஓய்வினை அறிவிக்கும் முன் தான் கடைசியாக டெஸ்ட் விளையாடிய பந்தினை கையில் எடுத்துச்சென்றார் தோனி. அதனால் ஓய்வு முடிவினை அளித்துவிடுவாரோ என்று ரசிகர்கள் அதிர்ந்தனர். ஆனால், தோனியின் இந்த செயல் அவரது ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாமே :

நேரில் பார்த்ததால் நானே இதற்கு சாட்சி. நினைத்தால் பெருமையாக உள்ளது – அனுஷ்கா சர்மா ட்வீட்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்