கிரிக்கெட் : திருமணத்தின்போது பெயரை மாற்றி திருமணம் செய்த கோலி, அனுஷ்கா சர்மா – ஏன் தெரியுமா ?

Anushka

இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட் அணிக்கும் தற்போது கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் தனது காதலியும், ஹிந்தி நடிகையுமான அனுஸ்கா சர்மாவை கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

virushka

இவர்களின் திருமணத்தின் போது கோலி தனது பெயரை ராகுல் என்று மாற்றி கூறி திருமணம் செய்துகொண்டார் என்று அனுஷ்கா சர்மா தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். இதற்கான காரணத்தையும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்தார். இதுகுறித்து அனுஷ்கா கூறியதாவது : நாங்கள் இருவரும் இந்தியா முழுவதும் தெரியும் பிரபலங்களாக இருப்பதனால் இந்தியாவில் எங்களது திருமணம் நடக்க மிகவும் சிரமம் இருக்கும் என்று கோலியின் மேனேஜர் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் எங்கு திருமணம் நடந்தாலும் நம்மால் அனைவரையும் அழைக்க முடியாது என்று நாங்கள் கருதினோம். அதனால் கல்யாணத்தை இத்தாலியில் எங்களது குடும்ப உறுப்பினர்களோடும், வரவேற்பு நிகழ்ச்சியினை இந்தியாவில் நடத்தவும் முடிவெடுத்தோம். இத்தாலியில் கூட எங்களது திருமணத்தை முன்கூட்டியே பதிவு செய்வதற்கு சிரமமாக இருந்தது. அதனால் கோலி தனது பெயரை ராகுல் என்று மாற்றிக்கொண்டே என்னே திருமணம் செய்தார். நானும் என் பெயரை மாற்றியே திருமணம் செய்தேன்.

viru

மேலும், நாங்கள் திருமணத்திற்கு பிறகு இந்தியா திரும்பி எங்களது உண்மையான பெயரில் திருமணத்தை பதிவு செய்து திருமண பதிவு சான்றிதழ் வாங்கினோம் என்று கூறினார் அனுஷ்கா சர்மா. தற்போது இந்த ஜோடி ஓராண்டை கடந்து காதல் ஜோடிகளாக வளம் வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி பதவிக்கு போட்டியிட உள்ள இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி – யாருடைய மனைவி தெரியுமா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்