நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி பதவிக்கு போட்டியிட உள்ள இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி – யாருடைய மனைவி தெரியுமா ?

Jadeja 1

இந்திய அணியில் கடந்த பலவருடங்களாக ஆல்ரவுண்டராக சிறப்பாக விளையாடி வருவார் ரவீந்திர ஜடேஜா. இவருக்கும் ரிவாபா என்பருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

rivaba

இந்நிலையில் அரசியல் ஆர்வம் அதிகம் உள்ள ரிவாபா நேற்று பூனம் என்ற பா.ஜ.க கட்சியின் எம்.பி முன்னிலையில் பா.ஜ.க கட்சியில் அதிகாரபூர்வமாக தன்னை இணைத்துக்கொண்டார். இதன்மூலம் அவருக்கு ஜாம் நகரின் முக்கிய கட்சி பதவியும் வழங்கப்பட்டது.

மேலும், ஜாம் நகர் பகுதியில் அதிகம் அறியப்படும் முகமாக ரிவாபா இருப்பதால் அவரை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியாளராக நிறுத்துவது குறித்து கட்சி மேல்;இடம் ஆலோசனை நடத்தி வருகிறது. ஆலோசையின் முடிவில் அவருக்கு எம்.பி எலெக்சனில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியும்.

Jadeja

ரிவாபா கடந்த ஆண்டு நடந்த கார் விபத்தில் அவரை விசாரித்த போலீஸ் அதிகாரியை அடித்தார். இந்த விடயம் அப்போது அதிக அளவில் பேசப்பட்ட விடயமாக இருந்தது. இந்நிலையில் தற்போது கட்சியில் இணைந்துள்ளார்.

இதையும் படிக்கலாமே :

உலககோப்பை தொடரில் எங்களது அணி அபாய மணி ஒலிக்க தயாராக உள்ளது – கெயில்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்