அனைத்து திறமைகளும் இருந்தும் அணியில் என்னை நிராகரிப்பது வேதனை அளிக்கிறது – இந்திய அணியின் இளம்வீரர்

shreyas

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 30ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான இந்திய அணி கிட்டத்தட்ட தயாராகிவிட்டது என்றே கூறவேண்டும். அணி கோலி தலைமையிலான இந்திய அணி இப்போது சுப்ரீம் பார்மில் உள்ளது.

indian-team

தற்போது உள்ள இந்திய அணியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடிவருவதால் புதியதாக எந்த வீரரையும் சேர்க்கும் திட்டம் என்பது இல்லை. எனவே உலகக்கோப்பை வரை இந்த இந்திய அணியே தொடரும் என்று தோன்றுகிறது. உலகக்கோப்பை தொடர் முடிந்ததே அணியின் அடுத்த புது வீரர்களுக்கான தேர்வு இருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: இந்திய அணியில் நான் ஏற்கனவே தேர்வாகி சிறப்பாக செயல்பட்டும் இந்திய அணியில் நான் தொடர்ந்து நீடிக்காதது வருத்தம் அளிக்கிறது. மேலும், உலகக்கோப்பை போட்டிகளிலும் எனக்கு இடமில்லை என்றே தோன்றுகிறது.

iyer

அனைத்து திறமையும் இருந்தும் நான் அணியில் தேர்வாகாதது வருத்தம் அளிக்கிறது. மேலும், எனது உலகக்கோப்பை இடம் இன்றும் தேர்வாளர்கள் கைகளில் உள்ளது. ஒருவேளை எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று ஐயர் கூறினார்.

இதையும் படிக்கலாமே :

ஓவரின் 6 பந்துகளையும் யார்க்கர் வீசும் திறன் படைத்தவர் இந்த இந்திய அணி பந்துவீச்சாளர் மட்டுமே – வாசிம் அக்ரம்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்