தனது 40ஆவது சதத்தினை அடித்து அசத்திய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் – கிங் கோலி

Kohli

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூர் மைதானத்தில் இன்று துவங்கியது. தற்போது டாஸ் வென்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

Toss

இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய ரோஹித் டக் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சியை தந்தார். பிறகு கேப்டன் கோலி தவானுடன் கைகோர்த்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடும் என்று எதிர்பாத்த நிலையில் தவான் 21 ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த ராயுடு 18 ரன்களில் வெளியேற விஜயும் கோலியும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

சிறப்பாக ஆடிய விஜய் ஷங்கர் 46 ரங்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஒரு புறம் விக்கெட்கள் விழுந்து கொண்டிருக்க மறுபுறம் நிலைத்து நின்று ஆடிவரும் கோலி ஒருநாள் சர்வதேச போட்டியில் தனது 40 ஆவது சதத்தினை இன்று அடித்தார். 107 பந்துகளில் 9 பவுண்டரிகளின் உதவியுடன் பவுண்டரி அடித்து தனது 40 ஆவது சதத்தினை பதிவு செய்தார்.

koli dhawan

தற்போது 45 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 233 ரன்களை குவித்துள்ளது. கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆடி வருகினர என்பது குறிப்பிடக்கத்து.

இதையும் படிக்கலாமே :

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து ஆப்பு வைத்துக்கொண்டது – ஏன் தெரியுமா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்