டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து ஆப்பு வைத்துக்கொண்டது – ஏன் தெரியுமா ?

Toss
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூர் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. தற்போது டாஸ் போடப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து தங்களுக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டது என்றே கூற வேண்டும்.

Toss

ஏனென்றால், நாக்பூர் மைதானம் வறண்ட பிட்ச் என்பதால் முதலாவது பேட்டிங் செய்யும் அணிக்கு அதிக அளவில் ஒத்துழைக்கும் மேலும், முதலாவதாக பேட்டிங் செய்யும் அணி 290 ரன்கள் வரை அடிக்க முடியும். இந்த மைதானத்தில் அது வெற்றிக்கு போதுமான இலக்காக இருக்கும் என்று கவாஸ்கர் கூறினார்.

- Advertisement -

மேலும், இந்த மைதானத்தில் பவுண்டரி எல்லைகள் மிக தூரம் என்பதால் சிக்ஸர்கள் அடிப்பது சற்று கடினம். அதனால் இந்த மைதானத்தில் ஓடியே அதிக ரன்களை எடுக்க முடியும். மேலும் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு டார்கெட் பெரியதாக இருந்தால் அதுவே அவர்களுக்கு அழுத்தத்தை அளித்து போட்டியை இழப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

ground 1

இந்த போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆஸ்திரேலிய அணி தரப்பில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷான் மார்ஷ் மற்றும் லயன் ஆகியோர் அணியில் புதிதாக இணைந்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

தோனி பயன்படுத்தும் கிரிக்கெட் பேட் தயாரிக்கபடும் மரம், விலை, வெயிட் அதற்காக பெரும் சம்பளம் – இதோ முழு விவரம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -