பிராத்தனைக்கான நேரம் இது : பரிசளிக்கும் நேரம் இல்லை புல்வாமா தாக்குதல் பாதிப்பில் நாடு இருக்கிறது. பரிசளிப்பு விழா முக்கியமில்லை. தள்ளிவைத்த விராட் கோலி – அஞ்சலி செய்ய வேண்டுகோள்

koli-king
- Advertisement -

நேற்று முன்தினம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதல் என்ற வெறியாட்டத்தில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 44 வீரர்கள் உடல் சிதறி உயிர் இழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நாடு முழுவதும் இருந்து ஆறுதல் செய்தி வந்த வண்ணம் இருந்தாலும் அவர்களின் அழுகுரல் அவ்வளவு எளிதில் நிற்காது.

koli 2

இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் இன்று தனியார் விளையாட்டு நிறுவனம் ஒன்றின் சார்பாக பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள இருந்தார். ஆனால், அதனை இன்று தள்ளிவைக்கும்படி அந்த நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக ட்விட்டரில் ஒரு பதிவினை இட்டுள்ளார் கோலி.

- Advertisement -

அதில் கோலி பதிவிட்டதாவது : நாடு முழுவதும் இப்போது துக்கம் அனுசரித்து கொண்டு இருக்கின்றனர். இந்த நேரத்தில் இந்த விழா வேண்டாம். நாளைக்கு தளி வைத்து கொள்ளுங்கள். இப்போது ஆத்மாக்களை அனுசரிக்கும் நேரம் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய அனைவரும் பிராத்திக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தங்களது இரங்கலை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.

இதையும் படிக்கலாமே :

புல்வாமா தாக்குதலில் பலியான நாட்டின் உண்மையான போராளிகளின் பிள்ளைகளுக்கு நான் இதனை கட்டாயம் கொடுக்கிறேன் – சேவாக் உதவிக்கரம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -