தோனியை தொடர்ந்து வெளியான கோலியின் வலைப்பயிற்சி வீடியோ. என்ன இப்படி பயிற்சி செய்யிறீங்க. நிச்சயம் கோப்பை நமக்கு தான் – வைரல் வீடியோ

Koli

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டி20 தொடரின் முதல் போட்டி இன்று (24-02-2019) துவங்க உள்ளது. இதற்காக இவ்விரு அணிகளும் இன்றும் தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்திய வீரர்கள் கடுமையாக பயிற்சி செய்தனர்.

koli-king

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு பின் கோலி பங்குபெறும் தொடர் இது தான். மேலும், உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கும் தொடர் இதுதான். எனவே, இந்த தொடர் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.

இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஏற்கனவே. தோனியின் பயிற்சி வீடியோ வெளியாகி வைரலானது இப்போது அவரை தொடர்ந்து கோலியின் பயிற்சி வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

இந்த தொடரில் இந்திய அணியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் அனைவரும் காத்துஇருக்கின்றனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை அணியில் இடம்பெறும் வீரர்கள் ஐ.பி.எல் தொடரின்போது இதை செய்யக்கூடாது. இல்லையென்றால் அணியில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்படும் – கோலி எச்சரிக்கை

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்