உலகக்கோப்பை அணியில் இடம்பெறும் வீரர்கள் ஐ.பி.எல் தொடரின்போது இதை செய்யக்கூடாது. இல்லையென்றால் அணியில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்படும் – கோலி எச்சரிக்கை

Kohli

இந்த வருடம் ஐ.பி.எல் போட்டிகள் அடுத்த மாதம் மார்ச் 29 ஆம் தேதி கோலாகலமாக துவங்க உள்ளது. இதில் கடந்த ஆண்டு சாம்பியனான சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

CSK

இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்று விளாயா உள்ளனர். இந்த வீரர்கள் உலகக்கோப்பை அணியிலும் இருப்பதால் இவர்கள் காயம் அடையாமல் இருக்க முழு கவனத்துடன் விளையாடவேண்டும் மேலும், அணி வீரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றிணையும் விடுத்துள்ளார்.

அதில் கோஹ்லி கூறியதாவது : இந்திய அணி வீரர்கள் ஐ.பி.எல் தொடரின் போது எந்த ஒரு சர்ச்சையில் ஈடுபடும் செயல்களிலும் ஈடுபடக்கூடாது. மேலும், தவறான பழக்கங்கள் மற்றும் பார்ட்டி கொணடாட்டங்கள் போன்றவற்றை செய்யக்கூடாது.

ABD

மேலும், உடலை வருத்திக்கொள்ளும் எந்த பழக்கவழக்கங்களையும் வைத்து கொள்ளக்கூடாது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரில் அணி வீரர்களின் உடல் தகுதி ரொம்பவே முக்கியம் என விராட் கோலி கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே :

40 வயதில் 50ஆ அசத்திய கெயில். சாதனை மேல் சாதனை. சதத்தை தொடர்ந்து இதிலும் சாதனையா ? என்ன சார் நீங்க

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்