ஓய்வு குறித்த தனது கருத்தினை முதன் முறையாக வெளியிட்ட – கிங் கோலி வீடியோ

koli-king

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை (12-01-2019) சிட்னி நகரில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.நாளை (12-01-19) காலை சரியாக இந்திய நேரப்படி 7.50am மணிக்கு போட்டி துவங்கும். நாளைய போட்டி இரு அணி ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

koli

இந்நிலையில் இன்று சிட்னியில் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த தொடர் குறித்த பேட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கலந்து கொண்டார். அந்த சந்திப்பில் இந்த தொடரின் பல விடயங்களை பற்றி கோலி பேசினார். அப்போது தீடிரென்று ஒரு நிருபர் உங்களது கிரிக்கெட் வாழ்வின் ஓய்வு முடிவினை எப்போது அறிவிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிரித்தபடி பதிலளித்த கோலி : நான் எப்போது முழுமையாக கிரிக்கெட் விளையாடி முடித்துள்ளேன் என்று நினைக்கிறேனோ அதுவரை கண்டிப்பாக நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். மேலும், நான் கடந்த 4,5 ஆண்டுகளில் போதுமான அளவு கிரிக்கெட் விளையாடியுள்ளேன். ஆனால், நான் இன்னும் முழுமையாக விளையாடியதாக கருதவில்லை. கோலி பேசிய வீடியோ இதோ உங்களுக்காக :

அதுவரை என்கைகளில் பேட் இருந்து கொண்டே இருக்கும் . போட்டிகளின் மத்தியில் விடுமுறை நாட்கள் இருக்கின்றன அது எனது ஓய்வுக்கு போதும் ஆகவே இப்போது ஓய்வு குறித்து நான் நினைத்து கூட பார்ப்பது இல்லை என்று கூறினார். இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து இதே பார்மில் ஆடினால் உலகின் பல சாதனைகள் கோலியின் கைகளில் உடைபடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை .

இதிலும் படிக்கலாமே :

தோனியின் கடைசி ஆஸ்திரேலிய தொடர். பயிற்சி செய்யும் இடத்தில் குவியும் தல ரசிகர்கள் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்