தோனியின் கடைசி ஆஸ்திரேலிய தொடர். பயிற்சி செய்யும் இடத்தில் குவியும் தல ரசிகர்கள் – வீடியோ

dhoni 1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை (12-01-2019) சிட்னி நகரில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளைய போட்டியில் இரு அணிகளின் வீரர்களின் பட்டியல் இன்னும் சற்று நேரத்தில் உறுதிப்படுத்தப்படும்.

dhoni

நாளை (12-01-19) காலை சரியாக இந்திய நேரப்படி 7.50am மணிக்கு போட்டி துவங்கும். நாளைய போட்டி இரு அணி ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு இது கடைசி ஆஸ்திரேலிய தொடராகும். இப்போது தோனிக்கு 37 வயதாவதால் அடுத்த ஆஸ்திரேலிய தொடரில் அவரால் பங்கிருக்க முடியாது.

எனவே, இந்த தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த டோனி பயிற்சியை முடித்து தனது ஓய்வு அறைக்கு செல்லும் முன் ரசிகர்கள் தோனியை கண்டு ஆர்ப்பரித்தனர். அதனை கண்ட தோனி சிரித்தபடி அவர்களிடையே சென்று ரசிகர்களின் நோட்களில் ஆட்டோகிராப் போட்டார். மேலும், சிலர் தோனியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பயிற்சி எடுக்கும் இடத்திற்கே எவ்வளவு பேர் வருகிறார்கள் என்றால் நாளைய முதல் போட்டியில், தோனியின் ரசிகர்கள் பெருமளவு வருவார்கள் என்று கருதலாம். மேலும், இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலிய ரசிகர்களும் தோனி கண்டு ஆர்ப்பரித்தனர்.

இதையும் படிக்கலாமே :

8 ஆண்டுகள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இணையும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் – இவரா?

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்