அனுஷ்காவை திட்டியவர்களுக்கு இந்த வெற்றியின் மூலம் பதில் அளித்துள்ளேன் – கோலி பளீர்

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இவ்வ்ரு அணிகளுக்கும் இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து முடிந்தது. இந்த தொடரினை சிறப்பாக விளையாடி இந்திய இந்த தொடரை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. 71 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் தனது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.

kohli

இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். அனைவரும் கோப்பையை கைகளில் ஏந்தி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். அப்போது இந்திய அணியின் கேப்டன் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா மைதானத்திற்குள் வந்து கோலியை அணைத்து கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை அவருடன் பரிமாறிக்கொண்டார். அப்போது அனுஷ்கா சிறிதளவு கண்ணீரும் சிந்தினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரைஇறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு 328 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த போட்டியில் வெற்றி பெற நிச்சயம் கோலி பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த போட்டியில் 13 பந்துகளை சந்தித்து 1 ரன்னில் கோலி ஜான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து சோகத்துடன் வெளியேறினார். அந்த தோல்வி மூலம் இந்திய அணியும் தொடரில் இருந்து வெளியேறியது.

அப்போது ரசிகர்கள் கோழியின் இந்த சொதப்பலுக்கு காரணம் அனுஷ்கா சர்மா தான் என்று கூறி விமர்சித்தனர். அப்போது கோலி மற்றும் அனுஷ்கா காதலித்த காலம், அனுஷ்காவுடன் கோலி சுற்றுவதால் தான் அவரால் சரியாக ஆடமுடியவில்லை என்று அனைவரும் அனுஷ்காவை வசைபாடினர். இது குறித்து கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கருத்தினை ஒரு புகைப்படத்தின் மூலம் பதிவிட்டார்.

anushka

- Advertisement -

இந்நிலையில் கோலி மற்றும் அனுஷ்கா திருமணம் நடந்து ஒரு ஆண்டு கடந்து விட்ட நிலையில் இப்போது இந்திய அணி பெடற்ற இந்த வெற்றி இந்த காதல் ஜோடிக்கு கிடைத்த பரிசாக கருதுகின்றனர். என்று எனது இந்த வெற்றுக்கு காரணம் என் காதல் மனைவி அனுஷ்கா சர்மா என்னுடன் இருப்பதால் தான் கிடைத்தது என்று கோலி அனுஷ்காவை வசைபாடியவர்களுக்கு பதில் அளித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே :

விராட் கோலி கைகளில் கோப்பையை ஏந்தும் போது நான் அழுது விட்டேன் – சுனில் கவாஸ்கர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்