விராட் கோலி கைகளில் கோப்பையை ஏந்தும் போது நான் அழுது விட்டேன் – சுனில் கவாஸ்கர்

kohli
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இவ்வ்ரு அணிகளுக்கும் இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து முடிந்தது. இந்த தொடரினை சிறப்பாக விளையாடி இந்திய இந்த தொடரை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. 71 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் தனது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.

koli

இந்நிலையில் கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரும் இந்திய அணியின் இந்த வெற்றி குறித்து தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிவித்தபடி உள்ளனர். அதிலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் வெற்றி குறித்து அளித்துள்ள கருத்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

- Advertisement -

சுனில் கவாஸ்கர் : விராட் கோலி கைகளில் அந்த கோப்பையை ஏந்தும் போது எனக்கு பெருமையாக இருந்தது. மேலும், மகிழ்ச்சியின் மிகுதியால் என் கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்தது. ஏனெனில் அது உண்மையில் ஒரு வரலாற்று நிகழ்வு நான் அங்கு இருந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால்,நான் அங்கு இல்லாதது சற்று வருத்தத்தை தந்தது. எனது பெயரில் நடந்த தொடர் ஆனதாலும் இந்த தொடர் வெற்றி என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு தருமணமாக இருக்கும்.

sunil

மேலும், நான் நேரில் பார்க்கவில்லை என்றாலும் அந்த நிகழ்வை தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப பார்க்கிறேன். எதனை முறை அந்த காட்சியை கண்டாலும் எனக்கு இந்திய அணி வீரர்களை நினைத்து பெருமையாக உள்ளது. உண்மையில் கிரிக்கெட் வரலாற்றில் இந்த வெற்றி ஒரு வரலாற்று பதிவு தான் என்று தனது கருத்தை தெரிவித்தார் சுனில் கவாஸ்கர். இந்த வெற்றி குறித்து உங்களது கருத்துக்கள் நீங்களும் கமெண்ட் பகுதியில் பதிவிடலாம் நண்பர்களே.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தால் தொடரை இழந்தோம் – ஆஸி கேப்டன்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -