தோனியின் அனுபவம் அவருக்கு கைகொடுக்கலாம். ஆனால், நியூசிலாந்தில் அவர் இதனை செய்யமுடியாது – ராஸ் டெய்லர்

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்தில் நடைபெற உள்ளது . இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நியூசிலாந்தில் துவங்குகிறது.

ind vs nz

இதற்காக இரு அணிவீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தொடர்களாக இந்திய அணி எதிர்அணிகளுக்கு கடும் சவாலை அளிக்கும் வகையில் விளையாடி வெற்றிகளை ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ராஸ் டெய்லர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியின் கடந்த ஆஸ்திரேலிய தொடர் அவர்கள் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். அதில் இந்திய அணியின் வீரரான தோனி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். மூன்று ஒருநாள் போட்டிகளிலும் தோனி சிறப்பாக பினிஷிங் செய்தார். அவரது பினிஷிங் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

ms

அவரது அனுபவம் அந்த தொடரில் கைகொடுத்தது. அவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கிரிக்கட் அனுபவம் உடையவர் அது அவருக்கு பல சூழ்நிலைகளில் வெளிப்பட்டது. இருப்பினும், இந்த தொடரில் நியூசிலாந்து மண்ணில் அவருடைய ஆட்டம் தொடர்வதை நாங்கள் விடமாட்டோம். இதுவரை அவர் எங்களது நாட்டில் ரன்களை குவித்துள்ளார். அதனை இந்த தொடரில் தடுத்து நிறுத்துவோம் என்று ராஸ் டெய்லர் கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

இவர்களது பந்துவீச்சு எங்கள் அணியை நிச்சயம் அச்சுறுத்தும் – நியூசி பயிற்சியாளர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -