தோனியின் பேட்டிங் பார்ம் கடந்த ஆண்டு மோசமாக இருந்தது. ஆனால், அவர் மீது நம்பிக்கை வைத்து கோலி என்னிடம் பேசியவை இதுதான் – இந்திய தேர்வுக்குழு தலைவர்

koli-dhoni

கடந்த 2018 ஆம் ஆண்டு தோனியின் பேட்டிங் ரொம்ப பொறுமையாக இருந்ததாகவும், ஒரு ஆண்டு முழுவதும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை மேலும், அவரால் போட்டிகளை முன்பை போல முடித்துத்தர அவரால் அவரது பேட்டிங் பார்ம் ஒத்துழைக்கவில்லை என பல தரப்பினரும் கருத்தினை கூறி வந்தனர்.இதுகுறித்து இந்திய அணியின் தேர்வுக்குழுவும் பரிசீலித்து வந்தது.

msk

இந்திய அணி தேர்வுக்குழுவுக்கும் இந்த கேள்வி இருந்தது. வயது முதிர்ச்சியின் காரணமாக தோனியால் சரியாக ஆடமுடிய வில்லையா என்று. நிச்சயம் அவர் நல்ல வீரர் தான் அதை மறுப்பதற்கு ஒன்றும் இல்லை. அவரது விக்கெட் கீப்பிங் திறன் அபரிவிதமானது. ஆனால், பேட்டிங்கில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று இந்திய தேர்வுக்குழு நினைத்தது.

இதுகுறித்து கோலியிடம் ஆலோசனை நடத்தினோம். ஆனால், அதில் கோலி கூறியதாவது : தோனி அபாரமான திறமை கொண்ட ஆட்டக்காரர். அவர் இளம்வயதில் அதிரடியாக ஆடியது போல் இப்போதும் அதிரடியாக ஆடுவதை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது அணியின் தேவைக்கேற்ப நிலைமையினை உணர்ந்து ஆடுகிறார் அதுவே ரசிகர்கள் தோனி பேட்டிங் குறித்து கருத்து கூற காரணம்.

dhoni 2

எனவே அவரை இனிமேல் பிரஷர் கொடுக்காமல் இயல்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துமாறு சொல்லப்போகிறேன். அவ்வாறு அவர் இயல்பான ஆட்டத்தை ஆடினால் தோனியால் எந்த வயதிலும் சிறப்பாக ஆடமுடியும் என்று கோலி தேர்வுக்குழுவினரிடம் கூறியதாக தேர்வுக்குழு தலைவர் கூறினார். மேலும், ஆஸ்திரேலிய தொடரில் டோனி சிறப்பாக ஆட காரணம் அந்த இயல்பான ஆட்டமே. மேலும், இவரின் இந்த ஆட்டம் மற்றும் அனுபவம் நிச்சயம் உலகக்கோப்பையில் கைகொடுக்கும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

இந்தியா திரும்பியதும் அணியின் துவக்க ஆட்டக்காரர் தவான் செய்த காரியத்தை பாருங்கள் – உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்