யுகம் யுகமாக நம்முடைய பாரம்பரியத்தில் கடைப்பிடித்து வரக்கூடிய ஒரு விஷயம் நிலை வாசலைக் கூட்டி தெளித்து கோலம் போடுவது. ஆனால் இந்த பழக்கமே கால போக்கில் மறைந்து விடும் போல. அப்பார்ட்மெண்ட் சிஸ்டம், நிலை வாசலில் கூட்டி கோலம் போட முடியாத சூழ்நிலை பல பேருக்கு இருக்கிறது. எந்த இடத்தில் குடியிருந்தாலும், உங்கள் வீடு முன்பு இருக்கக்கூடிய இடத்தை சுத்தம் செய்துவிட்டு தினமும் காலையில் சின்ன கோலம் போடுவது தான் நம்முடைய கலாச்சாரம். அதை யாரும் மறந்துடாதீங்க. கூடுமானவரை இந்த வேலையை தினமும் சிரமம் பார்க்காமல் செய்து விடுங்கள்.
இந்த நிலை வாசலை கூட்டி கோலம் போடுவதில் இன்று பலபேர் செய்யக்கூடிய ஒரு தவறை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்று நிலை வாசலைக் கூட்டி கோலம் போட்டாலும் நிறைய பேர் அரிசி மாவால் கோலம் போடுவது கிடையாது. மொக்குமாவால் தயார் செய்யப்படும் கோலப்பொடியை வைத்து தான் கோலம் போடுகின்றோம்.
சில பேர் அந்த கோலப்பொடியில் இன்னும் பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதற்காக, அரிசி மாவை அந்த கோலப்போடியோடு, கலந்து நிலை வாசலில் கோலம் போடுகிறார்கள். இது மிகப்பெரிய பாவம். இதை அரிசி மாவு என்ற நினைத்து எறும்புகள் ஈக்கள் பறவைகள் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் ஏராளம். அரிசி மாவை சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. அது நமக்கு வாயில்லா ஜீவன்களுக்கு தானம் செய்த புண்ணியத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
இப்படி அரிசி மாவில் கோலப்பொடியை கலந்து கோலம் போடும்போது அதை சாப்பிடக்கூடிய வாயில்லா ஜீவன்கள் பாதிக்கப்படுகிறதா இல்லையா? இதன் மூலம் பறவைகள் பக்ஷிகள் புழு பூச்சிகளின் சாபம் நம் குடும்பத்திற்கு உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. புண்ணியத்தை தேடுகின்றோமோ இல்லையோ, சில பாவத்தை தேடிப்போய் செய்யாமல் இருந்தால் சரி. ஆகவே கோலப்பொடியுடன் யாரும் அரிசி மாவை கலந்து கோலம் போடாதீங்க.
வெறும் அரிசி மாவைக் கொண்டு கம்பி இழுப்பதற்கு சிரமமாக இருந்தாலும், வெறும் அரிசி மாவை வைத்து கோலம் போடுவதை சரியான முறை. இதன் மூலம் பூமாதேவியின் ஆசிர்வாதமும் நமக்கு பல மடங்கு கிடைக்கும். பூமாதேவி மனம் மகிழ்ந்து நமக்கு நிலம் சம்பந்தப்பட்ட நிறைய நல்ல வளங்களையும் வரமாக கொடுப்பாள் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் மட்டும் இப்படி அரிசி மாவை கொண்டு கோலம் போடாமல் கோவிலுக்கு சென்று அந்த கோவிலில் இருக்கக்கூடிய சன்னிதானத்திற்கு முன்பும் அரிசி மாவால் கோலம் போடும் பழக்கத்தை வைத்துக் கொண்டால், கோடி புண்ணியம் உங்கள் குடும்பத்தை வந்து சேரும் என்பது நம்பிக்கை. இதையெல்லாம் தாண்டி பெண்கள் குனிந்து நிலை வாசலில் கோலம் போடும் போது அவர்களுடைய கர்ப்பப்பை உறுதி அடையும் என்பதும் அறிவியல் ரீதியான உண்மை.
இதையும் படிக்கலாமே: வெற்றி தரும் பிள்ளையார் மந்திரம்
அறிவியல் ரீதியாக நல்லது நடந்தாலும் சரி, ஆன்மீக ரீதியாக நல்லது நடந்தாலும் சரி, அறிந்தோ அறியாமலோ சின்ன புழு பூச்சிக்கு கூட நம் கையால் பாவத்தை செய்யக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிவு. உங்களுக்கும் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் நம்பிக்கை இருந்தால் இனி கோலம் போடும்போது வெறும் அரிசி மாவில் மட்டும் போடுங்கள். அரிசிமாவோடு கோல பொடியை சேர்க்கவே சேர்க்காதீங்க. இது மிகப் பெரிய பாவம் என்ற தகவல்களுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்..