கோளறு பதிகம் ஸ்லோகம்

rahu-kethul-1
- Advertisement -

“நல்லவனுக்கு நாளும் இல்லை, கோளும் இல்லை” என ஒரு பழைய அனுபவ பழமொழி உண்டு. அதாவது எந்த ஒரு மனிதன் அனைத்து நற்குணங்கள் நிறைந்தவனாகவும், ஞானியாகவும் ஆகிறானோ அவனை “கெட்ட நாள், கெட்ட நேரம், நவகிரக தோஷம்” போன்ற எதுவும் பாதிக்காது. ஆனால் சாமானிய வாழ்க்கை வாழும் பெரும்பாலான மக்கள் இவற்றால் பாதிப்படையவே செய்கின்றனர். இப்படிப்பட்டவர்களின் துன்பத்தை போக்க திருஞான சம்பந்தரால் இயற்றப்பட்ட பாடல் தான் “கோளாறு பதிகம்”.

navagragham

கோளறு பதிகம் ஸ்லோகம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

- Advertisement -

நவகிரகங்களை போற்றி இயற்றப்பட்ட ஸ்லோகம் இது. தினமும் காலையில் குளித்து முடித்த பின்பு ஒன்பது முறை இந்த ஸ்லோகத்தை பாடி வர வேண்டும். சனிக்கிழமைகளில் நவகிரக சந்நிதிக்கு சென்று, ஒன்பது கிரகங்களுக்கு ஒரு தீபம் வீதம், ஒன்பது தீபங்கள் ஏற்றி இந்த ஸ்லோகத்தை 27 முறை கூறி வந்தால் உங்களுக்கு எந்த கிரக தோஷம் இருப்பினும் அவை நீங்கும். நீங்கள் ஈடுபடும் அனைத்து செயல்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

navagragam

இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டதாக இருக்கிறது. இதற்கு பூமியில் வாழும் மனிதர்களும் விதிவிலக்கல்ல. இங்கு வாழும் மனிதர்கள் மட்டுமின்றி அனைத்தின் மீதும் விண்ணில் இருக்கின்ற ஒன்பது கோள்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் விஞ்ஞான உண்மையை கண்டறிந்தனர் நம் முன்னோர்கள். ஒன்பது கிரகங்களால் தீமையான விளைவுகள் ஏற்படாமல் நற்பலன்கள் அதிகம் கிடைக்க கோவில்களில் நவகிரகங்களை வழிபடும் நடைமுறையை உருவாக்கினர். அதற்கான மந்திரங்களையும் உருவாக்கி மக்கள் அவற்றை கூறி வழிபட்டு நன்மைகளை பெறச் செய்தனர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
காளிகாம்பாள் ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்

English overview:
Here we have Kolaru pathigam slokam in Tamil or Kolaru pathigam lyrics in Tamil. It is also called as Kolaru pathigam padalgal. We described Kolaru pathigam palangal too here.

- Advertisement -