உடல் எடையை குறைக்கும் கொள்ளு சட்னி! ரொம்ப ஈசியாக 10 நிமிடத்தில் நம்ம வீட்டிலேயே இப்படித்தான் ருசியாக தயாரிக்கணுமா?

kollu-chutney1_tamil
- Advertisement -

உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது கொள்ளு! கொள்ளு சார்ந்த உணவுப் பொருட்களை சமைத்து சாப்பிடும் பொழுது உடலில் இருக்கக்கூடிய கொழுப்புகள் கரைந்து வேகமாக உடல் எடை குறையும் என்பது நம்பிக்கை. அப்படி இருக்கையில் காலையில் எழுந்ததும் என்னடா சட்னி செய்வது? என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த கொள்ளு வைத்து சட்னி ரொம்ப எளிதாக தயாரிக்கலாம். அருமையான இந்த கொள்ளு சட்னி டேஸ்ட்டியாக சுலபமாக தயாரிப்பது எப்படி? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

கொள்ளு – 50 கிராம், சமையல் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பூண்டு – நான்கு பற்கள், வரமிளகாய் – ஐந்து, சின்ன வெங்காயம் – 10, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – கால் கப், உப்பு – தேவையான அளவு, தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை விளக்கம்

கொள்ளு சட்னி செய்வதற்கு முதலில் 50 கிராம் கொள்ளை ஒரு வாணலியில் போட்டு லேசாக சூடு பறக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்து வந்ததும் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.

இவை வறுபட்டு வந்ததும் ஐந்து பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் 10 சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுதாக அப்படியே சேர்த்து வதக்குங்கள். காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். இவை எல்லாம் ஓரளவுக்கு வதங்கி வந்த பின்பு நீங்கள் சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதை, நாரெல்லாம் நீக்கி சேர்க்க வேண்டும்.

- Advertisement -

ஒரு ஐந்து நிமிடம் அனைத்தும் நன்கு வதங்கிய பின்பு தேங்காய்களை சில்லுகளாக நறுக்கி சேர்க்க வேண்டும் அல்லது துருவியும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் கொஞ்சம் பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு ஒரு பிரட்டு நன்கு பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான், இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வறுத்து வைத்துள்ள கொள்ளை முதலில் சேர்த்து நைசாக பவுடர் போல அரைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
300 விதமான நோய்களைத் தீர்க்கும் முருங்கைக் கீரையை இப்படி கூட தொக்கு செய்து சாப்பிடலாமே! சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.

பின்னர் அவற்றுடன் நீங்கள் வதக்கிய பொருட்களையும் சேர்த்து கொஞ்சம் போல தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து எடுக்க வேண்டும். இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க, தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். பின்னர் கடுகு போட்டு பொரிய விட்டு, கறிவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி கலந்து விடுங்கள். அவ்வளவுதாங்க, கொள்ளு சட்னி ரொம்பவே அருமையான முறையில் இப்பொழுது தயார்! நீங்களும் இதே மாதிரி செஞ்சு சாப்பிட்டு அசத்துங்க.

- Advertisement -