300 விதமான நோய்களைத் தீர்க்கும் முருங்கைக் கீரையை இப்படி கூட தொக்கு செய்து சாப்பிடலாமே! சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.

murungai-keerai-thokku
- Advertisement -

ஆமாங்க, நம்முடைய உடம்பில் இருக்கும் கண்ணுக்குத் தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத பல விதமான பிரச்சினைகளை விரட்டி அடிக்க, பலவிதமான சத்துக்களை கொண்டு வந்து உடம்பில் சேர்க்க, இந்த முருங்கைக்கீரை ரொம்ப ரொம்ப அவசியம். பெரும்பாலும் இந்த கீரையை சுத்தம் செய்வதற்கு சிரமப்பட்டு கொண்டே யாரும் வாங்க மாட்டாங்க. ஆனால் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் வாரத்தில் ஒருமுறையாவது, உங்களுடைய வீட்டில் முருங்கைக் கீரையை சமைத்தே ஆக வேண்டும். இதில் எண்ணில் அடங்கா ஏராளமான சத்துக்கள் இருக்கு. இந்த முருங்கைக் கீரையை வைத்து ஒரு வாரம் கெட்டுப் போகாத முருங்கைக்கீரை தொக்கு செய்வது எப்படி என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இட்லி, தோசை, சப்பாத்தி, சுடசுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அட்டகாசமான சைடிஷ். தயிர் சாதத்திற்கும் தொட்டு சாப்பிடலாம். வாங்க மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை படித்து தெரிந்து கொள்வோம்.

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, வர மல்லி 1 டேபிள் ஸ்பூன், மிளகு 1 ஸ்பூன், வெந்தயம் 10, சீரகம் 1 ஸ்பூன், வர மிளகாய் 10, போட்டு வறுக்கவும். இந்த பொருட்கள் எல்லாம் நன்றாக முக்கால் பாகம் வறுபட்ட பின்னர், இறுதியாக கடுகு 1/2 ஸ்பூன் சேர்த்து வறுத்து இந்த பொருட்களை எல்லாம் ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆர வைத்துக் கொள்ளுங்கள். ஆரிய பின்பு இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்து அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்து, கழுவி தண்ணீர் வடித்த முருங்கைக்கீரை 2 கைப்பிடி அளவு சேர்க்க வேண்டும். அழுத்தமாக பிடித்தால் நல்ல பெரிய கையில் இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயில் போட்டு இரண்டு நிமிடம் போல வதக்கினால் முறுக்கை கீரை வெந்து சுருங்கி வெந்துவிடும். இதையும் அடுப்பை அணைத்துவிட்டு ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் வறுத்தோம் அல்லவா, மசாலா பொருட்கள். வரமல்லி, மிளகு, வெந்தயம், சீரகம், மிளகாய் இந்த எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, ஒரு ஓட்டு ஓட்டிக் கொள்ளுங்கள். கொரகொரப்பாக இந்த பொருட்கள் எல்லாம் அரைபடட்டும் பிறகு தண்ணீரில் ஊற வைத்த சின்ன நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரோடு இதில் ஊற்றி அரைக்கவும்.

- Advertisement -

அடுத்து வதைக்கி வைத்த முருங்கைக் கீரைகளை இதில் போட்டு பல்ஸ் மூடில் இரண்டு ஓட்டு ஓட்டுகள் முருங்கைக்கீரை அரைபட்டு வந்துவிடும். ரொம்பவும் முருங்கைக் கீரையை போட்டு அரைத்தால் லேசாக கசப்பு தட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். முக்கால் பாகம் வரை முருங்கைக்கீரை அரைபடட்டும். இப்போது நாம் அரைத்த விழுது அப்படியே இருக்கட்டும்.

அடுப்பில் மீண்டும் ஒரு கடாயை வைத்து 3 டேபிள் ஸ்பூன் கட்டாயம் நல்லெண்ணெய் விட வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் வெங்காய வடகம் அல்லது கடுகு சீரகம் தாளித்து கருவேப்பிலை 1 கொத்து போட்டு தாளித்து, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் இந்த அரவையை நல்லெண்ணெயில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து விட்டு நன்றாக தொக்கை கலந்து விட வேண்டும். லேசாக மிக்ஸி ஜாரை கழுவி தண்ணீரை ஊற்றிக் கொள்ளலாம். தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: வெங்காயம் தக்காளி எதுவும் சேர்க்காம காய்கறி சாம்பார் இப்படி அரைச்சி ஊத்தி வச்சீங்கன்னா, நீங்க வைக்கிற சாம்பாரோட மணம் பக்கத்து தெரு வரைக்கும் வீசும்.

கடாயில் இந்த தொக்கு தண்ணீர் எல்லாம் சுண்டி சுருண்டு எண்ணெய் பிரிந்து வரும் பத்து நிமிடங்கள் எடுக்கும். (இடையிடையே கரண்டியை வைத்து கலந்து விட்டே கொண்டே இருங்கள் அடி பிடிக்காமல்.) அப்போது அடுப்பை அணைத்து விட்டால் சூப்பரான முருங்கைக்கீரை தொக்கு தயார். இதன் ருசி ரொம்ப ரொம்ப அருமையாக இருக்குங்க. ஒரு வாரம் வரைக்கும் கெட்டுப் போகாது. ருசி நிறைந்த இந்த முருங்கைக்கீரை ரெசிபி மிஸ் பண்ணாம ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க உங்க வீட்லயும்.

- Advertisement -