சுவையான கொள்ளு பருப்பு கடையல் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க. அருமையோ அருமை.

kollu-masiyal
- Advertisement -

கொள்ளு உடலுக்கு மிகமிக ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு தானியம். பெரும்பாலும் இதை நிறைய பேர் உணவில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு இரண்டு நாளாவது இந்த கொள்ளு பருப்பை நாம் சாப்பிடலாம். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை வெளியேற்றுவதற்கு இந்த கொள்ளு மிக மிக உதவியாக இருக்கும். சரி கொள்ளு பருப்பை வைத்து சுவையான ஒரு கடையல் ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.

kollu

முதலில் 100 கிராம் அளவு கொள்ளை இரண்டிலிருந்து மூன்று முறை நன்றாகக் கழுவி விட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஊறிய இந்தக் கொள்ளை ஒரு குக்கரில் போட்டு 1 கப் அளவுக்கு, 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு, நன்றாக வேக வைத்து கொள்ளுங்கள். வேக வைத்த இந்த கொள்ளு பருப்பு அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம் 1 ஸ்பூன், வரமல்லி – 1 ஸ்பூன், வரமிளகாய் – 5 போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். தண்ணீர் ஊற்றாமல் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த மூன்று பொருட்களை வறுக்க தேவையில்லை. அப்படியே அரைத்துக் கொள்ளுங்கள். இந்த மசாலா தான், இந்த கொள்ளு பருப்பு கடையளுக்கு ஹைலெட்.

kollu-masiyal1

அடுத்தபடியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் 3 ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ளவேண்டும். தோலுரித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 15 பல், பூண்டு பல் – 6, கருவேப்பிலை – 1 கொத்து, இந்த மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக வதக்கவேண்டும். சின்ன வெங்காயம் சுருங்கி வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக பொடியாக நறுக்கிய தக்காளி பழம் ஒன்றை சேர்த்து தக்காளி கரையும்வரை வதக்கி விட்டு, வேக வைத்திருக்கும் கொள்ளை கடாயில் ஊற்றி குழம்புக்கு தேவையான அளவு உப்பை போட்டு, அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை கொட்டி நன்றாக கலந்து விட்டு ஒரு மூடியைப் போட்டு வேக வைத்து விடுங்கள். (கொள்ளு வேகவைத்த தண்ணீர் இருக்கும் அல்லவா அந்த தண்ணீரே போதுமானது. தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொள்ளலாம்.)

kollu-masiyal2

நாம் இதில் போட்டிருக்கும் மசாலா பொருட்களின் பச்சை வாடை நீங்க ஐந்திலிருந்து ஆறு நிமிடங்கள் எடுக்கும். மிதமான தீயில் குழம்பு கொதிக்கட்டும். அதன் பின்பு மூடியைத் திறந்து உப்பு சரி பார்த்துவிட்டு, இந்தக் குழம்பு சூடாக இருக்கும்போதே ஒரு மத்தை வைத்து அப்படியே கடைந்து விடவேண்டும்.

kollu-masiyal3

கொள்ளு ஆங்காங்கே ஒன்றும் இரண்டுமாக தெரியவேண்டும். லேசாக மசித்து விட்டு இதன் மேலே கொத்தமல்லி தழைகளைத் தூவி அப்படியே சுடச்சுட சாதத்தில் போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் அட்டகாசமான ருசியில் இருக்கும். நீங்களும் உங்க வீட்ல ஒரு வாட்டி கொள்ளு கடைகளை இப்படி ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா திரும்பத் திரும்ப செஞ்சுக்கிட்டே இருப்பீங்க.

- Advertisement -