உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள கொள்ளு பொடி எப்படி செய்வது? இட்லி பொடி போல, கொள்ளு பொடி ரெசிபி உங்களுக்காக!

kollu-podi
- Advertisement -

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரத்தில் 2 லிருந்து 3 நாட்கள் கொள்ளு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கொள்ளை சுண்டல் செய்து சாப்பிடுவார்கள். கொள்ளு ரசம் வைத்து சாப்பிடுவார்கள். சிலபேருக்கு இதையெல்லாம் சமைத்து சாப்பிட நேரம் இருக்காது. ஆர்வமும் இருக்காது. இட்லி பொடி போல பொடித்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு ஸ்பூன் அளவு இட்லி தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் உடலுக்கு நன்மையை சேர்க்கும். அந்த சுவையான சுலபமான கொள்ளு இட்லி பொடியை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதோடு சேர்த்து அசத்தலான கொள்ளு சூப் ரெசிப்பி உங்களுக்காக இந்த பதிவின் இறுதியில்.

kollu

கொள்ளு பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
கொள்ளு – 250 கிராம், தோல் உரித்த பூண்டு பல் – 10, வரமிளகாய் 8 லிருந்து 10 காரத்திற்கு ஏற்ப, சீரகம் 1 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 1/2 டீஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன்.

- Advertisement -

உரித்த பூண்டு பல்லை முதலில் ஒன்றும் இரண்டுமாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் முதலில் கொள்ளை போட்டு கொள்ளு சிவக்கும் வரை நன்றாக வறுக்கவேண்டும். இந்த இடத்தில் கொள்ளு வறுபடும்போது கருகி போகக்கூடாது. நன்றாக பொரிந்து வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள்.

kollu-podi1

இதை ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதே கடாயில் வரமிளகாய், மிளகு, சீரகம் கருவேப்பிலை இவைகளை ஒவ்வொன்றாக போட்டு வாசம் வரும் வரை கருகாமல் வறுத்து எடுத்து வறுத்து வைத்திருக்கும் கொள்ளு இருக்கக்கூடிய தட்டிலேயே போட்டு வைத்து வர வேண்டும். இறுதியாக 1 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி பூண்டை போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கி இதையும் கொள்ளு தட்டில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

இறுதியாக அடுப்பை அணைத்து விட்டு பெருங்காயத்தையும் உப்பையும் அந்த கடாயில் போட்டு வறுத்து இந்த எல்லா பொருட்களையும் நன்றாக ஆறவைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து எடுத்து, ஒரு பாதியை எடுத்து ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொண்டால் இந்த கொரகொரப்பாக பொடியில் சூப் செய்யப் போகின்றோம். மற்றொரு பாதி மிக்ஸியில் இருக்கும் அல்லவா அதை நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். தினமும் இட்லி பொடி போல இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

kollu-podi2

நைசாக அரைத்து வைத்த கொள்ளு பொடியை சாதத்தில் பருப்பு பொடி போல கூட போட்டு ஒரு சொட்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த நைசாக அரைத்த பொடியை வைத்து ஒரு சூப்பரான சூப் கூட ரெடி பண்ணலாமே அதையும் தெரிஞ்சுக்கலாமா இந்த குறிப்போடு!

- Advertisement -

kollu-podi3

சூப் வைக்க முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10, பழுத்த தக்காளி – 1 போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு விழுது போல் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, கொள்ளு பொடியை 2 டேபிள் ஸ்பூன் அளவு போட்டு கொள்ள வேண்டும். அந்த குக்கரில் மிக்ஸி ஜாரில் அரைத்து இருக்கும் வெங்காயம் தக்காளி விழுதையும் சேர்த்து மிக்ஸி ஜாரை நன்றாக கழுவி சூப்புக்கு தேவையான அளவு தண்ணீரையும் இந்த இடத்தில் ஊற்றிவிட வேண்டும்.

kollu

2 டேபிள் ஸ்பூன் அளவு கொள்ளு பொடி போட்டால், இரண்டு டம்ளர் அளவு சூப் வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஆக இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி விட்டு 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு, 1/2 ஸ்பூன் உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி மிதமான தீயில் நான்கிலிருந்து ஐந்து விசில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான். இந்த சூப்பை சுட சுட கிண்ணத்தில் ஊற்றி, 1/2 ஸ்பூன் அளவு மிளகு பொடியை தூவி, கொத்தமல்லி தழையை தூவி பரிமாறுங்கள். நிச்சயமாக சுவையாக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
சேமியாவை இப்படித்தாங்க செய்யணும். டேஸ்ட்ல பிரியாணி தோத்தது போயிரும்! இப்படி செஞ்சு கொடுத்தா யாருமே சேமியா வேணாம்னு சொல்ல மாட்டாங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -