சேமியாவை இப்படித்தாங்க செய்யணும். டேஸ்ட்ல பிரியாணி தோத்தது போயிரும்! இப்படி செஞ்சு கொடுத்தா யாருமே சேமியா வேணாம்னு சொல்ல மாட்டாங்க.

semiya
- Advertisement -

சேமியா என்று சொன்னாலே சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் சேமியாவை இப்படி பிரியாணி மாதிரி செய்து கொடுத்து பாருங்கள். நிச்சயமாக எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். அசத்தலான சேமியா ரெசிபி உங்களுக்காக. நேரடியா ரெசிபியை பார்த்துக்கலாம். முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் அளவு நெய் ஊற்றி சேமியாவை பொன்னிறம் வரும் வரை, வாசம் வரும் வரை வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். சேமியாவை வருக்கும் போது கை விடாமல் வறுக்க வேண்டும்.

semiya1

அடுத்தபடியாக கேரட் 1, உருளைக்கிழங்கு 1, பீன்ஸ் 5 வேக வைத்த பச்சை பட்டாணி ஒரு கைப்பிடி, இந்த காய்கறிகளை எல்லாம் வெட்டி கொஞ்சம் உப்பு போட்டு வேகவைத்து ஓரமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். (இது தவிர உங்களுக்கு வேறு எந்த காய்கறிகளை இதில் சேர்க்க வேண்டும் என்றாலும் சேர்த்துக்கொள்ளலாம் அது உங்களுடைய விருப்பம் தான்.)

- Advertisement -

2 கப் அளவு சேமியா கிச்சடி செய்வதற்கு தேவையான அளவுகள் தான் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 2 கப் (ஆழாக்கு) சேமியா செய்ய வேண்டுமென்றால், 2 கப் அளவு தண்ணீர் மட்டுமே போதுமானது. இதில் 1 கப் அளவு தண்ணீர் ஊற்ற போகின்றோம். 1 கப் அளவு தேங்காய் பாலை ஊற்ற போகின்றோம். 1 கப் தேங்காய் பால் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். (சேமியாவை எதில் அளந்து எடுத்துக் கொள்கிறார்களோ அதே கப்பில் தண்ணீரையும், தேங்காய் பாலையும் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்.)

choped-veg

இப்ப சேமியா பிரியாணிய தாளிக்க ஆரம்பிச்சுடலாம். ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் பிரியாணி இலை – 2, பட்டை – 2, லவங்கம் – 2, அன்னாசிப்பூ – 1, சோம்பு – 1/2 ஸ்பூன், ஏலக்காய் – 2, இந்த பொருட்களை போட்டு பொரிய விட வேண்டும்.

- Advertisement -

நீல வாக்கில் வெட்டிய வெங்காயம் – 1 போட்டு கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். அதன் பின்பு பச்சைமிளகாய் – 3 கீனியது சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் கறிவேப்பிலை – 1 கொத்து, கொத்தமல்லி தழை சிறிதளவு, புதினா – 1/2 கைப்பிடி அளவு இவைகளையும் போட்டு ஒரு நிமிடம் வரை வதக்கி, 2 – டேபிள் ஸ்பூன் அளவு தயிர் ஊற்றி, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வதக்கி இறுதியாக வேக வைத்த காய்கறிகளை கொட்டி, 1 கப் அளவு தேங்காய்ப்பால் ஊற்றி, 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.

semiya2

இந்த இடத்தில் உப்பு காரம் கரெக்டா இருக்கா பாத்துக்கோங்க! தேவைப்பட்டால் இந்த இடத்தில் சேர்த்துக் கொள்ளலாம். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், வறுத்த சேமியாவை கொட்டி கிளறி அடுப்பை முதலில் உயர்ந்த தீயில் வைத்து கடாயை தட்டு போட்டு மூடி விட வேண்டும். சேமியா முக்கால் பாகம் வெந்து விடும்.

- Advertisement -

சேமியா முக்கால் பாகம் வெந்ததும் தட்டை திறந்து நன்றாக கிளறி, தண்ணீர் அனைத்தும் முழுமையாக சுண்டிய பின்பு, அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு மீண்டும் பத்து நிமிடங்கள் வரை வேக வைத்தால், சேமியாவில் இருக்கும் பிசுபிசுப்பு அனைத்தும் நீங்கி, உதிரி உதிரியான சேமியா பிரியாணி கிச்சடி தயார். இப்படி மட்டும் செய்து கொடுத்தால் சேமியாவை வேண்டாம் என்று யாருமே சொல்ல மாட்டார்கள். உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள அட்டகாசமான ரோட்டுக்கடை வடகறி! இதன் வாசம் அடுத்த வீதி வரை வீசும். இந்த ரெசிபியை மிஸ் பண்ணிடாதீங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -