எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலன் தரும் பூஜை பற்றி தெரியுமா ?

Gomatha pooja in tamil

பசு என்பது இந்துக்களால் தெய்வமாக பார்க்கப்படும் ஒரு ஜீவன். பசுவிற்கு அகத்திக்கீரை வாழைப்பழம் போன்றவற்றை கொடுப்பதால் பல தோஷங்கள் அகலும் என்று நமது சாஸ்திரம் கூறுகிறது. பசுவை ஆராதனை செய்து வழிபடுவோருக்கு அனைத்து தெய்வங்களை வழிபட்ட பலனும் ஒரு சேர கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. ஒருவர் எதை கேட்டாலும் அதை தரும் வல்லமை காமதேனு என்ற இந்திரலோக பசுவிற்கு உள்ளது என்பது நாம் அறிந்ததே. அதே போல இந்த பூவுலகில் வாழும் பசுக்களை நாம் பூஜை செய்து வழிபடுவதன் மூல அளப்பரிய பல நல்ல பலன்களை பெற முடியும்.

kamadhenu

கோ பூஜை செய்வது எப்படி:
ஒரு நல்ல நாளில் பசுவை குளிக்க வைத்து வீட்டிற்கு அழைத்து வந்து, பிள்ளையாரை வேண்டிய பின்பு பசுவின் மீதும் பன்னீர் தெளித்து, நெற்றியிலும் பின் புறத்திலும் தூய்மையான மஞ்சள் குங்குமம் தடவி, அதன் மீது ஒரு சேலையை போர்த்த வேண்டும். அதன் பிறகு பசுவின் முன்பும் பின்பும் சாம்பிராணி மற்றும் தூப தீபம் காட்ட வேண்டும். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பதை நினைவில் கொண்டு பசுவின் பின்புறத்திற்கு உரிய மரியாதை அளிக்கவேண்டும். அதன் பிறகு பசுவை மூன்று முறை வளம் வந்து பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் போன்றவற்றை கொடுங்கள். அதன் பிறகு கீழே உள்ள கோ மந்திரத்தை 9 முறை ஜபிக்கலாம்.

கோமாதா மந்திரம் :

சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி
பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே.

நமது வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றும்படி கோமாதாவிடம் வேண்டிக்கொண்டு இறுதியாத பசுவிற்கு ஆரத்தி எடுத்துவிட்டு பசுவின் உரிமையாளருக்கு உங்களால் முடிந்த தட்சணையை கொடுங்கள். அன்றைய தினத்தில் பசுவின் கோமியத்தை வீடு முழுவதும் தெளியுங்கள்.

இந்த பூஜையை ஒருவரோ அல்லது பலரோ சேர்ந்து செய்யலாம். இந்த பூஜை செய்கையில் பசு தன் கன்றோடு இருந்தால் மேலும் சிறப்பு. இந்த பூஜையை 5 , 7 , 9 அல்லது 11 வாரங்களோ மாதங்களோ தொடர்ந்து செய்வது மேலும் சிறப்பு சேர்க்கும். இந்த பூஜையை செய்வதன் மூலம் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும், கடன் தொல்லை நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும், துர் சக்திகள் இருந்தால் வீட்டை விட்டு நீங்கும், தோஷங்கள் மற்றும் சாபங்கள் நீங்கும். அனைத்து நல்ல காரியங்களும் கை கூடி வரும். இந்த பூஜையை செய்ய இயலாதவர்கள் தினமும் காலை வேலையில் பசுவை பார்த்து மேலே உள்ள மந்திரம் அதை 9 முறை ஜபித்து பசுவிற்கு உன்ன ஏதாவது கொடுக்கலாம். இதன் மூலம் கோமாதாவின் அருள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
ராஜ யோகம் தரும் ராகு காயத்ரி மந்திரம்

English Overview:
Here we described about how to do gomatha pooja in tamil. gomatha pooja benefits and gomatha pooja mantra in tamil are stated clearly here. If one do gomatha pooja then he will get the grace of all God. Gomatha is Kamadhenu. Kamadhenu has power to fulfill everybody need.