- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கறி சுவையில் கொண்டைக்கடலை குருமா 2 விசிலில் இப்படி கூட செய்யலாமா? இட்லி, தோசை, சாதம்,...

கறி சுவையில் கொண்டைக்கடலை குருமா 2 விசிலில் இப்படி கூட செய்யலாமா? இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என்று எல்லாத்துக்குமே செமயா இருக்கும்!

- Advertisement -

கரி குருமா என்றால் அதற்கு தனி மவுசுதான்! ஆனால் அதே சுவையில் வெஜிடேரியனில் குருமா செய்தால் எப்படி இருக்கும்? இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என்று எல்லா வெரைட்டி ரெசிபிகளுக்கும் அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கக் கூடிய இந்த கொண்டைக் கடலை குருமா ரெசிபி ரொம்ப சுலபமாக வீட்டிலேயே எப்படி தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

கொண்டைக்கடலை – 100 கிராம், பெரிய வெங்காயம் – நான்கு, தக்காளி – 4, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, அண்ணாச்சி மொக்கு, கல்பாசி – தலா 2, கொத்தமல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை

வெள்ளை கொண்டை கடலையை 100 கிராம் அளவிற்கு எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி ஊற விட்டு விட வேண்டும். மறுநாள் காலையில் இதனை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு சிறிய வாணலி ஒன்றை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் மிளகு, சீரகம் மற்றும் சோம்பு ஆகியவற்றை சேர்த்து லேசாக பொரிய வறுத்துக் கொள்ளுங்கள். இவை வறுபட்டதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் பாதி அளவிற்கு இதில் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வர இரண்டு நிமிடம் வதங்கியதும், தக்காளியை சேர்த்து வதக்குங்கள். இரண்டு நிமிடம் இவை மசிய வதங்கியதும், அடுப்பை அணைத்து ஆற விட்டுவிட்டு, நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் ஒரு குக்கர் ஒன்றை வையுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கல்பாசி, அண்ணாச்சி மொக்கு ஆகியவற்றை போட்டு லேசாக தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் மீதம் இருக்கும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வர நன்கு வறுபட்டதும் தக்காளி துண்டுகளுடன், இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து மசிய வதக்க வேண்டும். இவற்றின் பச்சை வாசம் போக மசிந்து வந்ததும், நீங்கள் அரைத்து வைத்துள்ளவற்றையும் சேர்த்து நன்கு கிண்டி விடுங்கள்.

பின்னர் இதற்கு தேவையான அளவிற்கு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் குழம்பு மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். இவை நன்கு கொதித்து வரும் பொழுது ஊற வைத்த கொண்டை கடலையையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
காலை உணவை ஆரோக்கியமானதாக மாற்ற கோதுமை மாவில் இடியாப்பம் செஞ்சு சாப்பிடுங்க, இப்படி செய்தா கொஞ்சம் கூட கஷ்டமே படாம கை வலிக்காமல் சுலபமா செய்திடலாம்.

பின் தேவையான அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி போட்டு 3 விசில் முதல் 4 விசில் வரை விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது திக்கான கிரேவியான சூப்பரான கொண்டைக்கடலை குருமா தயார்! இதன் மேல் கொத்தமல்லி தழையை தூவி சுடச்சுட சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என்று எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம் அட்டகாசமாக இருக்கும்.

சற்று முன்