காலை உணவை ஆரோக்கியமானதாக மாற்ற கோதுமை மாவில் இடியாப்பம் செஞ்சு சாப்பிடுங்க, இப்படி செய்தா கொஞ்சம் கூட கஷ்டமே படாம கை வலிக்காமல் சுலபமா செய்திடலாம்.

wheat idiyappam
- Advertisement -

இடியாப்பம் என்றாலே அது அரிசி மாவில் செய்வது தான் வழக்கம். இந்த இடியாப்பத்தை எல்லோரும் வீட்டில் செய்வது கிடையாது காரணம் அதை பிழிய கொஞ்சம் சிரமமாக இருக்கும் பக்குவமாக செய்தால் மட்டுமே அது நன்றாக வரும் என்பதால் தான். ஆனால் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் கோதுமை மாவை வைத்து ரொம்ப சுலபமாக கஷ்டப்படாமல் இடியாப்பம் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை

இந்த இடியாப்பம் செய்வதற்கு முதலில் ஒரு கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். பிறகு இட்லி தட்டில் ஒரு மெல்லிய துணி ஒன்றை போட்டு அதன் மேல் எடுத்து வைத்திருக்கும் கோதுமை மாவை சேர்த்து மூடி இட்லி தட்டை பாத்திரத்தில் வைத்து வேக வைத்து கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் போதும் மாவு நன்றாக வெந்து விடும்.

- Advertisement -

அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இந்த மாவை எடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளுங்கள். வேக வைத்து எடுத்ததால் இந்த மாவில் அதிகமான கட்டிகள் இருக்கும். எனவே மாவு சலிக்கும் சல்லடையில் இந்த மாவை கொட்டி ஜலித்தால் கட்டிகள் இல்லாமல் நைசான மாவு நமக்கு கிடைத்து விடும். சல்லடையில் கடைசியாக இருக்கும் சின்ன சின்ன கெட்டி மாவுகளையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து அதையும் சலித்துக் கொள்ளலாம்.

இப்போது ஒரு பாத்திரத்தில் இந்த மாவை கொட்டி கால் டீஸ்பூன் உப்பு சேர்த்த பிறகு முதலில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். மாவை பிசைய பிசைய கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைந்தால் போதும். முதலில் அதிகமாக ஊற்றி விடக் கூடாது. இந்த மாவு சப்பாத்தி மாவை விட கொஞ்சம் இளகுவாக இருக்கும் படி பிசைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து முறுக்கு பிழியும் அச்சு உள்புறம் முழுவதும் எண்ணெய் தடவி விட்டு இந்த மாவை எடுத்து அச்சில் சேர்த்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து இட்லி பானை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சூடான பிறகு, இட்லி தட்டில் இடியாப்பத்தில் பிழிந்து வைத்து ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்து விட்டால் போதும் சுவையான கோதுமை மாவு இடியாப்பம் தயார்.

இதையும் படிக்கலாமே: அஞ்சே நிமிஷத்துல அரிசி உளுந்து எதுவுமே இல்லாம நல்லா மொறு மொறுன்னு தோசையும், இதுக்கு சைடிஷா நல்ல ருசியா மதுரை காரச் சட்னியும் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

இந்த மாவை நாம் ஏற்கனவே வேக வைத்து சலித்திருப்பதால் சுடுதண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது மட்டுமின்றி வேக வைத்த மாவை நாம் பாக்ஸில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்தால் தேவைப்படும் போது உடனடியாக எடுத்து செய்து கொள்ளலாம். எப்போதும் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக கோதுமை மாவில் இந்த இடியாப்பம் செய்து கொடுத்துப் பாருங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -