கொண்டை கடலை சுண்டலை மிக எளிதாக இப்படி ஒருமுறை செய்து பாருங்கள். பிறகு மீண்டும் மீண்டும் செய்வீர்கள்.

sundal
- Advertisement -

பொதுவாக வீட்டில் நல்ல நாட்களில் கொண்டை கடலை சுண்டல் செய்வதுண்டு. மற்ற நாட்களில் இல்லை என்றாலும் நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி போன்ற தினங்களில் கொண்டை கடலை சுண்டல் ஒரு முக்கியமான நிவேதியமாக இருக்கும். இப்படியான கொண்டை கடலை சுண்டலை மிக மிக எளிதாக நம் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

sundal

கொண்டை கடலை சுண்டல் செய்ய தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டை கடலை – 1/2 கப், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 டீ ஸ்பூன், கடுகு, உளுந்து – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, கருவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள் – 1/4 டீ ஸ்பூன், தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், கேரட் துருவல் – ஒன்றரை டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி இலை – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை:
முதலில் கொண்டை கடலையை நன்கு கழுவிவிட்டு, சுமார் 8 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். இப்படி ஊறவைத்தால் தான் சுண்டல் நன்கு மிருதுவாக வரும். ஊற வைத்த பிறகு கொண்டை கடலையை குக்கரில் சேர்த்து அது வேகுவதற்கு தேவையான நீரை சேர்த்துவிட்டு, தேவையான அளவு உப்பை சேர்க்க வேண்டும். வேக வைக்கும்போதே உப்பை சேர்த்தால் தான் உப்பு சுண்டலோடு நன்கு கலந்திருக்கும்.

cooker

பிறகு, குக்கரை மூடி 5 விசில் வரும் வரை விட வேண்டும். பிறகு கொண்டை கடலையை குக்கரில் இருந்து எடுத்து மீதம் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, கொண்டை கடலையை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளலாம்.

- Advertisement -

சுண்டல் தாளித்தல்:
தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை சேர்க்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுந்து சேர்க்க வேண்டும். பிறகு காய்ந்த மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் சேர்க்க வேண்டும். பிறகு சிறிதளவு கருவேப்பிலை மற்றும் பெருங்காய தூள் சேர்க்க வேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்து விட வேண்டும். (வெங்காயம் வேண்டும் என்று எண்ணுபவர்கள் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக்கொள்ளலாம்)

thaalippu

பிறகு இந்த தாளிப்பை நாம் ஏற்கனவே வேகவைத்துள்ள சுண்டலில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பிறகு அதனோடு நாம் ஏற்கனவே துருவி வைத்துள்ள தேங்காய் துருவல் மற்றும் கேரட் துருவலை சேர்க்க வேண்டும். இறுதியாக பொடியாய் நிறுகிய கொத்தமல்லி இலையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

sundal

இதில் நாம் சேர்த்திருக்கும் கேரட் துருவல், கொத்தமல்லி இலை எல்லாம் தேவை பட்டால் சேர்த்துக்கொள்ளலாம் தேவை இல்லை என்றால் வேண்டாம். அதே போல இதை எல்லாம் நாம் சேர்க்கும்போது சாப்பிடுகையில் கூடுதலான ஒரு சுவை கிடைக்கும். அவ்வளவு தான் சுவையான கொண்டை கடலை சுண்டல் தயார்.

- Advertisement -