கொரியன் ஸ்கின் யாருக்கு தாங்க பிடிக்காது. முகத்தில் சுருக்கம் இல்லாமல் பார்ப்பதற்கு பளபளக்கும் தோற்றம் கிடைக்கும் என்றால் கசக்குமா என்ன. எல்லா பெண்களுக்கும் அழகின் மேல் ஒரு ஆர்வம். அதுவும் இந்த கிளாசி ஸ்கின் தேவை என்று அதிக செலவு செய்து ஏதேதோ ஃபேஸ் பேக் போடுறாங்க. ஏதேதோ பேஷியல் செய்து கொள்கிறார்கள். பிறகு அதன் மேலே எவ்வளவோ மேக்கப் வேற. ஆனால் பக்க விளைவுகள் ஏற்படாமல் எளிமையான முறையில் முகத்தை பொலிவாக பளபளப்பாக மாற்ற ஒரு எளிமையான வழி உள்ளது. அந்த குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
கொரியன் ஃபேஸ் பேக் தயார் செய்யும் முறை:
இந்த ஃபேஸ் பேக் தயார் செய்ய நமக்கு வெறும் 2 பொருட்கள் இருந்தால் போதும். பாசுமதி அரிசி, ஃபிளாக் சீட்ஸ். ஆளி விதை என்று இந்த விதைகள் நமக்கு சுலபமாக கிடைக்கின்றது. டிபார்ட்மென்டல் ஸ்டோரில் கேட்டாலே கிடைக்கும். இல்லையென்றால் ஆன்லைனில் ஆர்டர் செய்து இந்த ஆளி விதை வாங்கிக் கொள்ளுங்கள்.
இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் 1/2 கப் அளவு பாஸ்மதி அரிசி, 1/2 கப் அளவு ஃபிளாக் சீட்ஸ் சம அளவுகளில் எடுத்து கழுவி கொள்ளுங்கள். அதன் பின்பு அதில் நல்ல தண்ணீரை ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் கூட ஊற்றி இதை நன்றாக வேக வைக்க வேண்டும். குக்கரில் போட்டு விசில் விட்டு வேக வைத்துக் கொண்டால் கூட பரவாயில்லை. அது உங்களுடைய இஷ்டம். வெந்ததும் இந்த இரண்டு பொருட்கள் கஞ்சியோடு இருக்கும்.
இதில் நாம் ஃப்ளாக் சீட் சேர்த்து வேக வைத்திருப்பதால் கொஞ்சம் கொழகொழப்பாகத் தான் இருக்கும். ஃப்ளாக் சீட்ஸ் வேகுவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். அதையும் பார்த்துக் கொள்ளுங்கள். வெந்த பிறகு அந்த பொருட்களை எல்லாம் அப்படியே ஆரவிட்டு விடுங்கள். பிறகு இதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைஸ் ஸ்மூத் பேஸ்ட் ஆக அரைத்து ஒரு ஸ்டீல் சல்லடையில் வடிகட்டி எடுத்தால் ஒரு கிரீம் நமக்கு கிடைக்கும்.
இதை ஒரு பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் ஸ்டொர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஏழு நாட்கள் கெட்டுப் போகாது. இதை முகத்தில் லேயராக, பேஸ் பேக் போட்டு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். ஓரிரு நாட்கள் இந்த பேக்கை முகத்தில் போடும்போதே முகத்தில் நல்ல மாற்றம் தெரியும். எளிதில் உங்களுக்கு சுருக்கம் வராது எளிதில் வயதான தோற்றம் தெரியாது. முகம் அப்படியே பளிங்குகல் போல மின்னும். ட்ரை பண்ணி பாருங்க. தொடர்ந்து தினம்தோறும் இந்த பேக்கை போடலாம் தவறு கிடையாது. எந்த பக்க விளைவுகளும் இல்லாத அழகு குறிப்பு.
பின்குறிப்பு: அதேபோல இந்த பேக்கை போட்டு முடித்தவுடன் உங்களுடைய ஸ்கின் ட்ரை ஆகாது. இருப்பினும் பேக் போட்டு முகத்தை கழுவி துடைத்த பின்பு, ஒரு மாய்ஸ்ரைசர், அப்படி இல்லை என்றால் ஆலுவேரா ஜெல்லை அப்ளை செய்து கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். சருமம் வறட்சியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கையில் தான் உள்ளது. சருமம் எவ்வளவுக்கு எவ்வளவு வறட்சி ஆகிறதோ, அவ்வளவு சீக்கிரம் சருமத்தில் சுருக்கம் விழும். வயதான தோற்றம் சீக்கிரம் வந்துவிடும்.