இனி நீங்கள் ஒரு முறை ஆசைப்பட்டு வாங்கிய பேன்சி நகைகளை வாழ்நாள் முழுவதும் புதிது போலவே வைத்திருக்க சூப்பரான ஐடியா இருக்கு வாங்க. அதை என்னன்னு தெரிஞ்சுகிட்டு பழைய நகையே புதுசு போல போட்டு அசத்துங்க

fancy jewellery
- Advertisement -

இப்போது உள்ள பெண்களுக்கு தங்கம், வெள்ளி போன்ற நகைகளை விட இந்த பேன்சி நகைகளின் மீது தான் அதிகமான ஈடுபாடு உண்டு. ஒவ்வொரு ஆடைக்கும் ஏற்றார் போல் வகை வகையான பேன்சி நகைகளை வைத்து இருக்கிறார்கள். ஆனால் இது ஒரு முறை கருத்துப் போய் விட்டால் மறுபடியும் பயன்படுத்த முடியாது என நினைத்து இது நாள் வரை நாம் தூக்கிப் போட்டு இருப்போம். இனி அப்படி செய்யாமல் அதை சுலபமாக சுத்தம் செய்ய சுலபமான மூன்று வழிமுறைகளை இந்த வீட்டு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சின்ன சின்ன நகைகளை இப்படி கருத்து போனால் கூட பரவாயில்லை, ஒரு சில பேன்சி நகைகள் மிகவும் அழகாக இருக்கும். அதை அதிக விலை கொடுத்தும் வாங்கி இருப்போம். அதை எல்லாம் தூக்கி தூரப் போடுவது என்பது கஷ்டம் தானே. இனி நீங்கள் இப்படி வருத்தப்படவே தேவையில்லை இதோ அதற்க்கான எளிய வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

- Advertisement -

குறிப்பு:1
இந்த முறையில் கருத்து போன பேன்சி நகைகளை சுத்தம் செய்ய டொமேட்டோ கிட்சப் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கென நீங்கள் தனியாக பணம் கொடுத்து வாங்க வேண்டியது இல்லை. கடைகளில் ப்ரைட் ரைஸ் போன்றவற்றை வாங்கும் போது அதனுடன் கொடுப்பார்கள் அதை தூரத் தூக்கிப் போடாமல் வைத்திருந்து அதையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

டொமேட்டோ கிட்சப்பை ஃபேன்சி நகைகளின் மீது நன்றாக பிரஷ் வைத்து தேய்த்துக் கொள்ளுங்கள். இரண்டு நிமிடம் நகையை அப்படியே ஊற விடுங்கள். அதன் பிறகு தூள் உப்பை எடுத்து கொள்ளுங்கள். அதில் பிரஷை தொட்டு ஏற்கனவே டொமேட்டோ கிட்சப்பை தேய்த்து வைத்திருக்கும் பேன்சி நகைகளின் மீது லேசாக தேய்த்து எடுத்து விடுங்கள். கருமை படிந்த இடமெல்லாம் பளிச் சென்று மாறி புது நகை போலவே இருக்கும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் அலசி காட்டன் துணி வைத்து துடைத்து எடுத்துக் வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

குறிப்பு:2
இந்த முறையில் பேன்சி நகைகளை சுத்தம் செய்ய கோல்கேட் பேஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு வெண்மை நிறமாக உள்ள பேஸ்ட்டை தான் பயன்படுத்த வேண்டும். மற்ற நிறங்களில் உள்ள பேஸ்ட்டை பயன்படுத்தக் கூடாது. கருத்து போன பேன்சி நகைகளின் மீது இந்த பேஸ்ட்டை பிரஷ் வைத்து தேய்த்து விடுங்கள். அதன் பிறகு ஐந்து நிமிடம் அப்படியே ஊறட்டும். மறுபடியும் ஒரு முறை பிரஷ் வைத்து தேய்த்து சுத்தமான தண்ணீரில் அலசி காட்டன் துணி வைத்து துடைத்து விடுங்கள். இப்படி சுத்தம் செய்யும் போது பேன்சி நகைகளின் மீது இருக்கும் கருமை நிறம் மாறி நகைகள் பளிச் சென்று இருக்கும்

குறிப்பு:3
இந்த முறையில்  நகையை சுத்தம் செய்ய கிண்ணத்தில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகரை சேர்த்த பிறகு கருத்து போன பேன்சி நகைகளை அதில் போட்டு விடுங்கள். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து எடுத்து ஒரு முறை தேய்த்த பிறகு மீண்டும் கொஞ்சம் டொமேட்டோ கிட்சப் சேர்த்து இரண்டு நிமிடம் ஊறிய பிறகு தேய்த்து விட்டால் போதும். இந்த முறையில் எவ்வளவு கருத்து போன பழைய பேன்சி நகைகளும் பளிச் சென்று மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: நம்ம வீட்டு பாத்ரூம் எவ்வளவு கறை படிந்திருந்தாலும் பளிச் பளிச்சுன்னு மாத்த இனி கை வலிக்க தேய்த்து கஷ்டப்படவே வேண்டாமே! பாத்ரூம் சுத்தம் செய்ய 5 புதிய டிப்ஸ்.

நீங்கள் ஆசைப்பட்டு வாங்கிய நகைகளை தங்கம், வெள்ளி போல காலம் முழுதும் வைத்து பயன்படுத்த இந்த குறிப்புகள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில் இதை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -