- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோரிக்கையை நிறைவேற்றும் விநாயகர் மந்திரம்

கோரிக்கையை நிறைவேற்றும் விநாயகர் மந்திரம்

- Advertisement -

நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற வேண்டும் என்று சில காரியங்கள் இருக்கும். அந்த காரியங்கள் நல்லபடியாக நிறைவேற வேண்டும் என்றாலோ, விரைவில் நிறைவேற வேண்டும் என்றாலோ, அந்த காரியத்தை செய்யும் பொழுது எந்தவித தடைகளும் வரக்கூடாது என்றாலோ, அதை நாம் கோரிக்கையாக தெய்வத்திடம் முன்வைப்போம். அந்த வகையில் இன்று விநாயகர் சதுர்த்தி, இன்றைய நாளில் அனைவரும் விநாயகர் பெருமானை வழிபாடு செய்திருப்போம். விநாயகப் பெருமானை வழிபாடு செய்ததோடு விநாயகப் பெருமானுக்குரிய இந்த ஒரு மந்திரத்தோடு நம்முடைய கோரிக்கையையும் எழுதுவதன் மூலம் அந்த கோரிக்கையை விநாயகப் பெருமான் விரைவில் நிறைவேற்றுவார். அதை எப்படி எழுதுவது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

விநாயகர் மந்திரம்

விநாயகப் பெருமான் பல ரூபங்களில் நமக்கு அருள் புரிய கூடியவர். அப்படி பல ரூபங்களில் அவர் அருள்புரியும்பொழுது ஒவ்வொரு ரூபத்திற்கும் ஒவ்வொரு விதமான மந்திரங்கள் சிறப்பு மிகுந்ததாகவும், ஒவ்வொரு வேண்டுதலுக்கும் சிறப்பான மந்திரங்களும் இருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது நம்முடைய கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காகவும் மந்திரங்கள் இருக்கிறது. எந்த கோரிக்கையாக இருந்தாலும் சரி நியாயமான கோரிக்கையாக இருக்கும் பட்சத்தில் ஒரே ஒரு முறை மட்டும் இந்த விநாயகரின் மந்திரத்தை எழுதினால் போதும் அந்த கோரிக்கை நிறைவேறிவிடும்.

- Advertisement -

இந்த மந்திரத்தை இன்று இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் எழுதலாம். ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பேப்பரில் தான் மந்திரத்தை எழுத வேண்டும். பச்சை அல்லது நீல மை கொண்ட பேனாக்களை பயன்படுத்தி எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் பிள்ளையார் சுழி போட்டுக் கொள்ளுங்கள். பிறகு விநாயகரின் மந்திரத்தை எழுத வேண்டும். அந்த மந்திரத்திற்கு கீழேயே எந்த கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த கோரிக்கையை ஒன்றிரண்டு வார்த்தைகளில் எழுத வேண்டும். வேலை கிடைக்க, குழந்தை பாக்கியம் பெற, சொந்த வீடு யோகம் இப்படி எந்த அளவிற்கு சுருக்கமாக நம்முடைய வேண்டுதலை எழுத முடியுமோ அந்த அளவிற்கு சுருக்கமாக எழுதிக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை அப்படியே மடித்து நம் வீட்டில் இன்று நாம் விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்திருப்போம் அல்லவா? அந்த விநாயகர் சிலைக்கு பக்கத்தில் வைத்து விட வேண்டும். அதிகபட்சம் மூன்று கோரிக்கைகளை நாம் எழுதி வைக்கலாம். ஒவ்வொரு கோரிக்கையும் தனி தனி பேப்பரில் தான் எழுதி வைக்க வேண்டும். களிமண் பிள்ளையாருக்கு அருகில் வைத்திருக்கும் பட்சத்தில் களிமண் பிள்ளையாரை மூன்றாவது நாள் கரைத்த பிறகு இந்த பேப்பரை நம்முடைய வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகரின் படத்திற்கு, சிலைக்கு பக்கத்தில் வைத்து விட வேண்டும். எப்பொழுது அந்த கோரிக்கை நிறைவேறுகிறதோ அப்பொழுது அந்த பேப்பரை கற்பூரத்தை பயன்படுத்தி எடுத்து விட வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

” ஓம் கம் கணபதயே சர்வ காரிய சித்தி குரு குரு ஸ்வாஹா “

இதையும் படிக்கலாமே: விநாயகர் சதுர்த்தி மந்திரங்கள்

விநாயகப் பெருமானின் சக்தி வாய்ந்த இந்த காரிய சித்தி மந்திரத்தை ஒரே ஒரு முறை எழுதி நம்முடைய கோரிக்கையை முன் வைப்பதன் மூலம் விரைவில் விநாயகரின் அருளால் கோரிக்கை நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்