விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை வீட்டிற்கு அழைத்து வந்து பூஜை, புனஸ்காரங்கள் செய்து, மந்திரங்கள் ஓதி முழு பக்தியுடன் குடும்ப நலத்திற்காகவும், செல்வ செழிப்பு மற்றும் வெற்றிக்காகவும் பிரார்த்தித்துக் கொள்வது விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த இனிய நல்ல நாளில் விநாயகர் சதுர்த்தி அன்று மேற்கொள்ள வேண்டிய சங்கல்பம் மற்றும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் ஆகியவற்றை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
விநாயகர் சதுர்த்தி பூஜையின் போது, இடது கரத்தில் பூக்கள் மற்றும் அட்சதையை வைத்து வலது கரத்தால் மூடி வலது தொடையின் மீது வைத்துக் கொண்டு, பூஜைக்கான சங்கல்ப மந்திரத்தைக் கூறலாம்.
விநாயகர் சதுர்த்தி அன்று தமிழில் சொல்ல வேண்டிய சங்கல்பம்:
சங்கல்பம் (மனதின் உறுதிமொழி): “இன்று, சுபமான இந்த நல்ல வேளையில், நான் செய்த பாவங்கள் அனைத்தையும் நீக்கி, பரமேஸ்வரனின் திருவருளைப் பெறுவதற்காக, இந்த ப்ரம்மனின் இரண்டாவது பாதியில், ஸ்வேத வராஹ கல்பத்தில், வைவஸ்வத மன்வந்தரத்தில், கலியுகத்தின் முதல் பாதத்தில், ஜம்பூத்வீபம் என்று அழைக்கப்படும் இந்த பரந்த பூமியில், பாரத வருடத்தில், பரத கண்டத்தில், மேரு மலையின் தென் திசையில் அமைந்திருக்கும் இந்த இடத்தில், இப்போது நடந்து கொண்டிருக்கும், இந்த வருடத்தின், தென் திசையில் சூரியன் பயணிக்கும் இந்த தக்ஷிணாயன காலத்தில், மழைக் காலத்தில், சிம்ம மாதத்தில், வளர்பிறையின் நான்காம் நாளாகிய சதுர்த்தியில், இந்த சுபமான திதியில், இந்த நல்ல நாளில், இந்த நட்சத்திரம் மற்றும் நல்ல யோகத்துடன், அனைத்து நல்ல குணங்களும் நிறைந்த இந்த நல்ல நேரத்தில், எனது குடும்பத்தின் நன்மையையும், எனது வெற்றியையும், நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும், தர்மம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கு புருஷார்த்தங்களின் பலன்களையும், நான் விரும்பும் அனைத்தையும் அடைவதற்காகவும், எல்லா தீமைகளும் நீங்கி, எல்லா நன்மைகளும் கிடைப்பதற்காகவும், ஸ்ரீ மஹா கணபதியின் திருவருளைப் பெறுவதற்காக, இந்த ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி பூஜையை தொடங்குகிறேன்.”
இந்த சங்கல்பத்தை உச்சரிக்கும் போது, உங்கள் விருப்பங்களையும், நோக்கங்களையும் மனதில் கொண்டு, முழு ஈடுபாட்டுடன் கூறுவது மிகவும் முக்கியம். இதை சமஸ்கிருதத்தில் சொல்லுவார்கள். நாம் எளிய தமிழில் இப்படியும் சொல்லலாம். மேலும் விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள் பற்றி காண இருக்கிறோம்.
கணபதி காயத்ரி மந்திரம்:
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்!!!
கணபதி மூல மந்திரம்:
ஒம் கம் கணபதியே நமஹ!!!
தடை நீக்கும் கணபதி சக்தி வாய்ந்த மந்திரம்:
1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் கணபதயே வர வரத சர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா
2. ஓம் வக்ரதுண்டாய ஹீம் ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா.
கணபதி ஸ்லோகம்:
1. கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை கணபதி என்றிடக் காலனும் கைதொழும் கணபதி என்றிடக் கருமம் ஆதலால் கணபதி என்றிடக் கவலை தீருமே
இதையும் படிக்கலாமே:
பண வரவை அதிகரிக்கும் விநாயகர் சதுர்த்தி பரிகாரம்
2. வக்ரதுண்ட மஹாகாய
சுர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமேதேவா
சர்வ கார்யஷு சர்வதா