கொசுத்தொல்லை நீங்க காலியான இந்த பாட்டிலை இப்படி செய்தால் போதுமே! ஒரு கொசு கூட உங்க வீட்டு பக்கமே எட்டிப்பார்க்காது!

spray-agarbathi-mosquito
- Advertisement -

கொசு மற்றும் பூச்சிகளின் தொல்லை மழைக் காலங்களில் அதிகமாக வீடுகளில் வர துவங்கிவிடும். வெயில் காலங்களில் ஒன்றுமே தெரியாமல் இருக்கும் ஆனால் மழைக்காலம் வந்து விட்டாலே எங்கிருந்து தான் வரும் என்று தெரியாது! பூச்சிகளும், வண்டுகளும், கொசுக்களும் மாலை நேரங்களில் மற்றும் இரவு நேரங்களில் நம்மை நிம்மதியாக தூங்க விடுவதில்லை. இவற்றிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இப்படிக்கூட ஒரு யோசனை இருக்கிறது. அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

fridge-back-side

வீடு தோறும் எப்பொழுதும் தண்ணீரை தேங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அரசாங்கத்தால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. நல்ல தண்ணீரின் மூலம் விஷத்தை கக்கும் கொசுக்கள் உருவாகுகிறது என்று கூறப்படுகிறது. இதற்காக மாநகராட்சியில் இருந்து அடிக்கடி வீடுகளில் சோதனைகளை மேற்கொண்டு வருவதும் உண்டு. நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னால் இருக்கும் தண்ணீர் தேங்கும் டப்பாவை அடிக்கடி கழுவி வைக்க வேண்டும். அதில் தேங்கும் தண்ணீரானது கொசுக்களை வீட்டிற்குள் அதிகம் உற்பத்தி செய்துவிடும். எனவே வாரம் ஒருமுறை சுத்தம் செய்தல் மாட்டி விடுங்கள்.

- Advertisement -

அதே போல வீட்டை சுற்றிலும் சிறு சிறு கொட்டாங்குச்சியில் தேங்கும் தண்ணீர், டயர்கள் போன்றவற்றை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். இது நம்முடைய சுகாதாரத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இப்படி கொசுக்கள் மூலம் பரவும் நோய்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள என்னென்னவோ வழிமுறைகளை தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லையா?

mosquito1

பொதுவாக கொசுக்களை ஒழிக்க இயற்கையாக நாம் கையாளக் கூடிய ஒரு வழி என்றால் அது வேப்பிலை தான். காய்ந்த வேப்பிலைகளை எரித்து அதன் மூலம் வரும் புகையை வீடுதோறும் பரவ விட்டால் ஒரு கொசு கூட அந்த இடத்தில் தாங்காது. அது போல் நாம் ஏற்கனவே பயன்படுத்திய பேகான் ஸ்ப்ரே, ஹிட் போன்ற காலி பாட்டில்களை தூக்கி எறியாமல் அதனை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால் அதிகமாக கொசுக்கள் இருக்கும் சமயங்களில் இது போல் செய்து வைக்கலாம். அந்த பாட்டில்களுடைய வாய்ப்பகுதியினை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் நாலைந்து ஊதுபத்திகளை ஏற்றி சொருகி வையுங்கள். ஊதுபத்தியில் இருந்து கிளம்பும் புகை மற்றும் அந்த பாட்டிலில் இருக்கும் ஒருவிதமான ரசாயனம் கலந்து வீடு முழுவதும் பரவி வீட்டில் இருக்கும் கொசு மற்றும் பூச்சிகளை ஓட ஓட விரட்டி அடித்து விடும். அதன் பிறகு உங்கள் வீட்டுப் பக்கம் ஒரு கொசு, ஒரு பூச்சி கூட வரவே செய்யாது. இது மிகச் சிறந்த கொசு விரட்டியாக நிச்சயமாக இருக்கும்.

mosquito-valai

நீங்களும் உங்கள் வீட்டில் இதை முயற்சி செய்து பாருங்கள். வீட்டின் ஜன்னல்களுக்கு மாட்டி வைத்துள்ள வலைகளை அடிக்கடி கழுவிச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும் அதில் தேங்கும் தூசு, தும்புகள் மூலமாகக் கூட கொசுக்கள் பெருகும் அபாயம் உண்டு தெரியுமா? அதில் சிறிய ஓட்டை இருந்தால் கூட அதில் இருந்து சுலபமாக கொசுக்கள் உள்ளே நுழைந்து விடும். எனவே வாங்கும் பொழுதே சற்று விலை அதிகம் உள்ள கொசு வலைகளை வாங்கி மாட்டுவது மிகவும் நல்லது. இல்லையென்றால் நீங்கள் ஜன்னலின் கொக்கி பகுதியை மாட்டும் பொழுது இலேசாக வலையின் மீது பட்டால் கூட வலை கிழிந்து விடும்.

- Advertisement -