கொசு விரட்டி பயன்படுத்தியும் ஒரு கொசு கூட போகவில்லையா? அப்படின்னா வீட்டில் வெங்காயம் இருந்தா இத செஞ்சிப் பாருங்க, ஒரு கொசு கூட உங்க பக்கம் எட்டிப் பார்க்காது!

kosu-onion-mosquito
- Advertisement -

கொசுக்கள் மிக சிறிய அளவில் இருந்தாலும் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னவோ மிகப் பெரியதாக இருக்கின்றன. கொசுக்களால் பரவக்கூடிய நோய்கள் ஏராளம் உண்டு இவற்றால் நமக்கு ஏற்படக்கூடிய நோய் பாதிப்புகளின் எண்ணிக்கையும் அதிகம். எனவே கொசுக்கள் அதிகம் இருந்தால் அதை விரட்டுவதற்கு உரிய தீர்வையும் நாம் கடைபிடிக்க வேண்டும். கொசு விரட்டிகளை பயன்படுத்தியும் உங்கள் வீட்டில் கொசு போகவில்லை என்றால் வெங்காயத்துடன் இப்படி செய்து பாருங்கள், ஒரு கொசு கூட வீட்டில் பரவாது. அது என்ன? என்பதை இனி பார்ப்போம்.

கொசுவிரட்டி மருந்துகள் என்னதான் வீரியமாக இருந்தாலும் அதை விட இப்போது இருக்கும் கொசுக்கள் நல்ல வலிமை ஆகிக் கொண்டிருக்கின்றன. இது இயற்கையின் விதி ஆக இருந்து வருகிறது. கொசு விரட்டிகள் கொசுக்களை கொல்கிறதோ இல்லையோ நமக்கு சுவாச பிரச்சனைகளை மட்டும் ஏற்படுத்தி விட்டு சென்று விடுகிறது. எனவே இத்தகைய செயற்கை ரசாயன கலவைகளை பயன்படுத்தாமல் நம் வீட்டிலேயே இயற்கையாக எப்படி கொசுக்களை ஓட ஓட விரட்டுவது?

- Advertisement -

முதலில் வீட்டை சுற்றியும், வீட்டிலும் தண்ணீரை தேங்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக உங்களுடைய ஃபிரிஜ்-க்கு பின் பகுதியில் இருக்கக்கூடிய டப்பாவில் தண்ணீர் நீண்ட நாட்களுக்கு அப்படியே இருந்தால் அதன் மூலம் வீடு முழுவதும் கொசுக்கள் உற்பத்தி ஆவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்து வைத்துக் கொள்வது நல்லது.

முதலில் ஒரு வெங்காயத்தை தோலுரித்து உரலில் இட்டு நன்கு இடித்துக் கொள்ளுங்கள். இதனுடன் இப்போது வேறு ஒரு பொருளையும் நாம் சேர்க்கப் போகிறோம். அது கடுகு எண்ணெய் மற்றும் சாம்பிராணி கட்டி ஆகும். தாளிப்பு கரண்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கடுகு எண்ணெய் 2 ஸ்பூன் அளவிற்கு ஊற்றி நன்கு காய விடுங்கள். கடுகு எண்ணெய் காய்ந்ததும் அதில் சாம்பிராணி பொடியை பொடித்து தூவி விடுங்கள். அதிலிருந்து வரக்கூடிய தணலுடன் எடுத்து நீங்கள் நசுக்கி வைத்துள்ள வெங்காய பேஸ்ட் உடன் சேர்த்து மூலை, முடுக்குகள் மற்றும் கொசு அதிகம் வரும் இடங்களில் அப்படியே வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் நறுமணத்திற்கு ஒரு கொசு கூட வீட்டில் நிச்சயம் வரவே வராது. கடுகு எண்ணெய், சாம்பிராணி மற்றும் வெங்காயம் ஆகியவை சேரும் பொழுது ஒரு விதமான நறுமணம் வீசும். அவ்வாசம் கொசுக்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் எனவே அது வீட்டிற்குள் வராமல் வெளியே ஓடிவிடும். மேலும் உங்கள் வீட்டை சுற்றி நீர் நிலைகள் இருந்தால் அங்கு கொஞ்சம் துளசி சாற்றை தெளித்து விட்டால் கொசுக்கள் எல்லாம் ஓடி விடும். சாமந்தி செடி, புதினா, துளசி போன்றவை சிறந்த கொசுவிரட்டி தாவரங்களாக கருதப்படுகிறது.

மேலும் இப்படி செய்ய முடியாமல் இருப்பவர்கள் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகள் ஆக்கி அதில் ஆங்காங்கே கிராம்பு துண்டுகளைக் சொருகி வையுங்கள். எலுமிச்சை சாற்றுடன் கிராம்பின் வாசம் சேரும் பொழுது மூலை முடுக்குகளில் ஒளிந்து கொண்டிருக்கும் கொசுக்களும் வெளியில் வந்து தலை தெறிக்க ஓடி விடும். மேலும் ஓடோமஸ் போன்றவற்றை பயன்படுத்த முடியாதவர்கள் கொஞ்சம் வேப்பிலையைக் தேங்காய் எண்ணெயுடன் சம அளவு சேர்த்து கலந்து வைத்துக் கொண்டால் அவ்வப்போது கொசுக்கள் கடிக்கும் இடங்களில் தேய்த்துக் கொள்ளலாம். இது போல சந்தன எண்ணெய், வேப்பம் பூ பேஸ்ட், வேப்ப இலை பேஸ்ட், மஞ்சள் பேஸ்ட், துளசி பேஸ்ட், சந்தன எண்ணெய், தேயிலை மர எண்ணெய் போன்றவையும் சிறந்த கொசு விரட்டியாக செயல்படுகின்றன என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -