சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருள் போதும். உங்கள் வீட்டில் இருக்கும் 1 கொசு கூட உயிரோடு தப்பிக்கவே முடியாது.

kosu
- Advertisement -

என்னங்க கொசுவத்தி விளம்பரம் மாதிரி டைட்டில் இருக்குதுன்னு பாக்கறீங்களா. நிஜமாவே உங்க வீட்டிற்குள் வரும் ஒரு கொசு கூட உயிரோடு இருக்காது. கடையில் விற்கக்கூடிய கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய மூக்கு சுவாசத்திற்கு நிறைய பிரச்சனை வருகின்றது. சிறிய குழந்தைகள் இருக்கும் வீட்டில் எல்லாம் நிறைய வாசம் வீசக்கூடிய செயற்கையான கொசுவத்திகளை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தான ஒரு விஷயம். எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத சுலபமான 100% ரிசல்ட் தரக்கூடிய ஒரு ரெமிடியைதான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. ட்ரை பண்ணி பாத்துட்டு ரிசல்ட் எப்படி இருக்குனு நீங்களே டெஸ்ட் பண்ணிக்கோங்க.

முதலில் இந்த கொசு விரட்டிக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் வெங்காயம். நாம் எல்லோர் வீட்டிலும் இந்த வெங்காயம் இருக்கும். அடுத்தபடியாக இதற்கு கடுகு எண்ணெய் தேவை. பிறகு சாம்பிராணி. நாட்டு மருந்து கடைகளில் கட்டி சாம்பிராணி என கேட்டால் கொடுப்பார்கள். அதை தான் இந்த குறிப்புக்கு பயன்படுத்த வேண்டும். (வெங்காயம், கடுகு எண்ணெய், சாம்பிராணி, 3 பொருட்கள் போதும்.)

- Advertisement -

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் அளவு கடுகு எண்ணெயை ஊற்றி இந்த எண்ணெய்யை அப்படியே அடுப்பில் வைத்து, இதில் தூள் செய்த கட்டி சாம்பிராணியை 1 ஸ்பூன் அளவு போட்டு நன்றாக கலக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். இந்த எண்ணெயை வெதுவெதுப்பாக இரண்டு நிமிடம் போல சூடு ஆனால் போதும். சாம்பிராணி அந்த எண்ணெயிலேயே கரைந்துவிடும். அடுப்பை அணைத்து விடுங்கள்.

அடுத்தபடியாக ஒரு வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து சிறிய துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். வெட்டிய வெங்காயத்தை சிறிய உரலில் போட்டு இடித்து நசுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் ஒன்றும் இரண்டுமாக நசுங்கி ஒரு விழுது நமக்குக் கிடைத்திருக்கும். இந்த விழுதை ஒரு பிளாஸ்டிக் சிறிய கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இந்த விழுதின் மேலே நம் காய்ச்சி வைத்திருக்கும் கடுகு எண்ணெயை ஊற்றி கலந்து இந்த கிண்ணத்தை அப்படியே ஜன்னலின் ஓரங்களில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான். இதிலிருந்து வெளிவரக்கூடிய வாசம் ஒரு கொசுவை கூட உயிரோடு தப்பிக்க விடாது. இப்படியும் செய்யலாம்.

- Advertisement -

இல்லையென்றால் இன்னொரு மெத்தட் உள்ளது. வெங்காயத்தை உரலில் போட்டு இடித்து பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றக்கூடாது. வெங்காய சாறு 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சிய கடுகு சாம்பிராணி எண்ணெயை ஊற்றிக் கலந்து கொள்ள வேண்டும்.

வெங்காய சாறும் கடுகு எண்ணெயும் சேர்ந்த லிக்விடில் ஒரு காட்டன் பஞ்சை நனைத்துக் கொள்ள வேண்டும். நனைத்த இந்த காட்டன் பஞ்சில் வெங்காயம் சாம்பிராணி கடுகு எண்ணெய் வாசம் நன்றாக வெளிவரும் அல்லவா? இந்த வாசனை நிறைந்த பஞ்சை ஒரு சிறிய தட்டின் மேல் வைத்து அந்தத் தட்டை ஜன்னலோரமாக வைத்துவிடுங்கள்.

இதனுடைய வாசத்திற்கு கொசு வீட்டிற்குள் வரவே வராது. இதேபோல நிறைய பஞ்சுகளை நனைத்து ஒரு தட்டின் மேல் வைத்து வீட்டில் ஆங்காங்கே வைத்து விட்டால் ஒரு கொசு கூட தப்பிப்பிக்காது. இது ரொம்பவும் சுலபமான மலிவான குறிப்பு தான். ஒரே ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக ஒரு அதிசய மாற்றத்தை உங்கள் வீட்டில் காண்பீர்கள்.

- Advertisement -