அட! இது என்ன பச்சை கலர் இட்லி? இதை எப்படி செய்வது? பார்க்கும்போதே சாப்பிடனும்னு ஆசையா இருக்கா. ரெசிபியை தெரிஞ்சுக்கோங்க.

idli
- Advertisement -

அட இது என்ன பச்சை கலர் இட்லி. எப்போதும் போல இட்லி சுட்டு சாப்பிட்டு போர் அடிக்கும் சமயத்தில், இதையும் ட்ரை பண்ணி பார்க்கலாம். இந்த இட்லி செய்ய பிரிட்ஜில் இருக்கும் அதே இட்லி மாவு போதும். ரொம்பவும் கஷ்டப்படாமல் சாதாரணமாக சுடக்கூடிய இட்லியை, பச்சை நிறத்தில் செய்யப் போகின்றோம். இதனுடைய வாசமும் சுவையும் அவ்வளவு சூப்பராக இருக்கும். வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இப்படி வித்தியாசமாக எதையாவது செய்து தந்தால் அவர்கள் அதை விருப்பமாக சாப்பிடுவார்கள். சரி, இந்த இட்லிக்கு தொட்டு சாப்பிட டக்குனு செய்யக்கூடிய இன்ட்ரஸ்டிங்கான ஒரு சட்னி இருந்தால் நல்லா இருக்கும் அல்லவா. சூப்பரான பச்சை கலர் இட்லி, சூப்பரான சின்ன வெங்காய சட்னி எப்படி அரைப்பது ரெசிபியை பதிவிற்குள் சென்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இட்லி செய்முறை:
ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக்கோங்க. அதில் பச்சை மிளகாய் 2, தோல் சீவி நறுக்கிய சின்ன இஞ்சித்துண்டு, நறுக்கிய மல்லித்தழை 1 கைப்பிடி அளவு, உப்பு 1/4 ஸ்பூன் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சின்ன பாத்திரத்தில் 1 கப் அளவு இட்லி மாவு எடுத்துக்கோங்க. அதில் அரைத்து வைத்திருக்கும் இந்த விழுதை ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதனுடன் தேவை என்றால் மிகப் பொடியாக நறுக்கி கொத்தமல்லி தழை 2 ஸ்பூன் போட்டு கலக்கி மாவு தயார் செஞ்சு வச்சுக்கோங்க. ஒரு தாளிப்பு கரண்டியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, முந்திரி, போட்டு சிவக்க வறுத்து அதை அப்படியே இந்த இட்லி மாவில் கொட்டி கலந்து, இட்லி வார்த்து பாருங்கள். வேற லெவல் இட்லி தயார்.

பச்சை வெங்காய சட்னி செய்முறை:
இதற்கு சின்ன வெங்காயம் ரொம்ப ரொம்ப ருசி தரும். இரண்டு கைப்பிடி அளவு சின்ன வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் தோலுரித்த சின்ன வெங்காயம் 2 கைப்பிடி அளவு, தோல் உரித்த பூண்டு பல் 4 லிருந்து 5, வர மிளகாய் 5, உப்பு தேவையான அளவு, கோலி குண்டு அளவு புளி, வெல்லம் 1 ஸ்பூன், பாதி தக்காளி பழம் போட்டு, இதை விழுதாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் ஊற்ற தேவை கிடையாது.

- Advertisement -

இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெயில், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கருவாப்பிலை தாளித்து இந்த சட்னியில் கொட்டி கலந்து இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்கள் வேற லெவல் டேஸ்ட் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: ஹோட்டல் சரவண பவன் ஸ்டைல் தக்காளி சட்னியை அதே சுவையில் வீட்டில் செய்ய இந்த முறையில் தான் செய்யணும் தெரியும்மா?. அட்டகாசமான தக்காளி சட்னி ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

மேலே சொன்ன பச்சை நிற இட்லிக்கு, சூப்பரான இந்த பச்சை சின்ன வெங்காய சட்னி வேற லெவல் டேஸ்ட் தரும். இது செம காம்பினேஷன். நாம் எப்போதும் வீட்டில் செய்யக்கூடிய டிபன் ரெசிபி தான் இது. அதையே கொஞ்சம் வித்தியாசமாக செய்து இருக்கின்றோம். ஆரோக்கியமாகவும் செய்திருக்கின்றோம். ரெசிபி பிடிச்சவங்க மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -