- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஹோட்டல் சரவண பவன் ஸ்டைல் தக்காளி சட்னியை அதே சுவையில் வீட்டில் செய்ய இந்த முறையில்...

ஹோட்டல் சரவண பவன் ஸ்டைல் தக்காளி சட்னியை அதே சுவையில் வீட்டில் செய்ய இந்த முறையில் தான் செய்யணும் தெரியும்மா?. அட்டகாசமான தக்காளி சட்னி ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

- Advertisement -

இட்லி, தோசை போன்றதற்கு நாம் எத்தனை வகை சட்னிகள் செய்தாலுமே இந்த தக்காளி சட்னிக்கென தனி ஒரு சுவை உண்டு. இந்த சட்னியை பிடிக்காது என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இத்தனை பிடித்த சட்னியை அதுவும் ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவதென்றால் அது இன்னும் அதிக ருசியாகவே இருக்கும். இனி வீட்டிலும் நல்ல ருசியான ஹோட்டல் சுவை சட்னி எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 1, பெரிய தக்காளி – 2, காய்ந்த மிளகாய் – 5, பூண்டு – 10 பல், கருவேப்பிலை – 1 கொத்து, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு -1/2 டீஸ்பூன், கடுகு -1/4 டீஸ்பூன், சீரகம் – 1/4 டீஸ்பூன்.

- Advertisement -

செய்முறை 

இந்த சட்னி செய்ய முதலில் அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை எண்ணெயில் போட்டு வதக்கி கொள்ளுங்கள். இத்துடன் நான்கு காய்ந்த மிளகாயும் சேர்த்து பூண்டின் நிறம் மாறும் வரை வதக்கிய பிறகு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிய பிறகு இரண்டு தக்காளியையும் பொடியாக நறுக்கி சேர்த்து மஞ்சள் தூள் உப்பு இவற்றையும் சேர்த்த பிறகு நன்றாக கலந்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக விடுங்கள். இதற்குள்ளாக தக்காளி நன்றாக குழைந்து வெந்து வந்து விடும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இது அனைத்தையும் ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் ககொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அரைத்த இந்த சட்னியை மிக்ஸி ஜாரில் சேர்த்து பைன் பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பில் கடாய் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு சீரகம் சேர்த்து பொரிந்த பிறகு கருவேப்பிலை ஒரு காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்த பிறகு அரைத்து வைத்த சட்னி அதில் ஊற்றி ஒரே ஒரு நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இதய நோய் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் பாவக்காயை இப்படி ஒரு முறை தொக்கு செய்து கொடுத்துப் பாருங்கள். பாவக்காவா கசக்கும் என்று கூறுபவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

நல்ல சுவையான ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னி தயாராகி விட்டது. சுட சுட இட்லி தோசையுடன் இந்த தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டு பாருங்க எத்தனை சாப்பிட்டோம் என்று கணக்கே தெரியாமல் சாப்பிடுவோம். அந்த அளவிற்கு சுவை அட்டகாசமாக இருக்கும் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்