வெறும் 5 ரூபாய் செலவில் உங்களுடைய உதடுகளை ரோஜா இதழ் போல மாற்ற இந்த ஒரு பொருள் போதும்.

lips
- Advertisement -

எல்லோருக்குமே அவரவர்களுடைய உதடு ரோஜா இதழ் போல இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக செயற்கையாக கிடைக்கும் லிப் பாம், லிப்ஸ்டிக் இவைகளை வாங்கி அப்ளை செய்து கொள்கின்றோம். குறிப்பாக பெண்களுக்கு உதடு அழகில் அதிக ஆர்வம் இருக்கிறது. சில பேருடைய உதடு சிவப்பாக இருக்காது. சில பேருடைய உதடுகள் கருப்பு நிறத்தில் இருக்கும். சில பேருடைய உதடுகள் ட்ரையாக வெடிப்பு வெடிப்பாக இருக்கும். உங்களுடைய உதட்டில் இருக்கும் கருமை நிறத்தை நீக்கி பிங்க் நிறமாக மாற்றுவதற்கு இயற்கையான முறையில் ஒரு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் கொத்தமல்லி தழை. எல்லார் வீட்டு பிரிட்ஜிலையும் இன்றைக்கு கொத்தமல்லி தழை இருக்கு. ஆக பெரியதாக செலவு செய்ய வேண்டாம். முதலில் கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை எடுத்து சின்ன மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து பிழிந்து சாறை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் 1/2 ஸ்பூன் அரிசி மாவு போட்டு, அதில் எடுத்து வைத்திருக்கும் இந்த கொத்தமல்லி சாறை ஊற்றி ஒரு பேஸ்ட் ஆக கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை தொட்டு உங்களுடைய உதட்டை முதலில் ஸ்கிரப் செய்ய வேண்டும். லேசாக உதட்டின் மேல் இந்த பச்சரிசி மாவை தடவி இரண்டு நிமிடம் போல வட்ட வடிவில் தேய்த்து மசாஜ் செய்தால் உதட்டில் இருக்கும் டெட் செல்ஸ் நீங்கிவிடும். வாயை நன்றாக திறந்து வைத்து உங்கள் உதட்டை சுத்தம் செய்யுங்கள்.

அதன் பின்பு வெறும் தண்ணீரில் உங்களுடைய உதட்டை கழுவி துடைத்துக் கொள்ளுங்கள். மீதம் கொத்தமல்லி சாறு இருக்கும் அல்லவா. அந்த சாறை தொட்டு உதட்டை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்பு அந்த சாறை உதட்டில் அப்ளை செய்து விடுங்கள். இரண்டு நிமிடத்தில் காய்ந்து விடும். பிறகு இரண்டாவது கோட்டிங், பிறகு மூன்றாவது கோட்டிங் என்று ஐந்து முறை உதடு காய காய அந்த கொத்தமல்லி சாறை உதட்டில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவி விட வேண்டும். வாரம் இரண்டு முறை இந்த குறிப்பை பின்பற்றி வந்தால் உங்களுடைய உதடுகள் சூப்பராக சிவப்பாக மாறிவிடும்.

- Advertisement -

தினமும் உதடுகளை அரிசி மாவு போட்டு ஸ்கிரப் செய்யக்கூடாது. வாரத்தில் இரண்டு நாட்கள் தான் ஸ்க்ரப் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் தினமும் இந்த கொத்தமல்லி சாறை உதட்டில் அப்ளை செய்து கொள்ளலாம். அதன் மூலம் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய உதடு கருமை நிறம் நீங்கி இயற்கையாகவே பிங்க் நிறத்திற்கு வந்துவிடும்.

இந்த குறிப்பை பின்பற்றி வரும்போது உதட்டில் அடர்த்தியாக லிப்ஸ்டிக் போடுவது, தேவையற்ற மலிவான லிப்வாம்களை பயன்படுத்துவது, போன்ற விஷயங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 24 மணி நேரமும் உதட்டில் உதட்டு சாயத்தை பூசி வைத்திருந்தால் உதடுகள் கருப்பாகத்தான் செய்யும். அதற்கு பதில் தேங்காய் எண்ணெய், நெய், வெண்ணெய், பீட்ரூட் சாறு போன்ற விஷயங்களை உதட்டில் பயன்படுத்தி வரலாம். உதடுகள் வறண்டு போகாமல் எப்போதும் அழகாக இருக்கும்.

- Advertisement -