10 நாள் ஆனாலும் கெட்டுப் போகாத கொத்தமல்லி தொக்கு! இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க இனி இட்லி, தோசைக்கு வேற சைட் டிஷ் தேடவே மாட்டீங்க.

- Advertisement -

மணக்க மணக்க கொத்தமல்லி தொக்கு இப்படி செஞ்சு சாப்பிட்டால் சூடா இட்லி, தோசை எவ்வளவு கொடுத்தாலும் பத்தவே பத்தாது, சாப்பிட்டுகிட்டே இருக்க தோணும். அது மட்டுமல்லாமல் சூடான சாதத்துடன் அப்படியே பிசைந்து சாப்பிட்டால் அருமையான சுவையுடன் இருக்கக்கூடிய இந்த கொத்தமல்லி தொக்கு ரெசிபி எப்படி எளிதாக வீட்டில் தயார் செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

  • கொத்தமல்லி – ஒரு கட்டு
  • புளி – ஒரு எலுமிச்சை பழம் அளவு
  • வரமிளகாய் – 10
  • மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு. தாளிக்க: நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – அரை ஸ்பூன்
  • சீரகம் – கால் டீஸ்பூன்
  • வெந்தயம் – பத்து
  • பெருங்காயத்தூள் – ரெண்டு பின்ச். கருவேப்பிலை – ஒரு கொத்து
  • பூண்டு – 2 பல்.

செய்முறை

கொத்தமல்லி தொக்கு செய்வதற்கு முதலில் ஒரு பெரிய கட்டு கொத்தமல்லி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். பிரஷ்ஷாக பச்சை பசேல்னு இருப்பதாக எடுத்து அதை நன்கு கழுவி சுத்தம் செய்து உதறி பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்க்க வேண்டும். குண்டு மிளகாய் சேர்ப்பவர்கள் அதற்கு ஏற்ப குறைத்துக் கொள்ளுங்கள், இல்லையென்றால் காரம் அதிகமாகிவிடும்.

பின்னர் இவற்றுடன் 10 நிமிடம் நன்கு அரை கப், சுடு தண்ணீரில் ஊற வைத்து எடுத்த ஒரு எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை விதை, நார் எல்லாம் இல்லாமல் தண்ணீருடன் அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். பின் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நைஸ் ஆக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு நான்ஸ்டிக் பேன் ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் இரண்டு பல் பூண்டை நசுக்கி சேருங்கள்.

இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். சீரகம் சேர்த்து லேசாக வறுத்த பின்பு பத்து வெந்தயத்தை எண்ணி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் கொஞ்சம் பெருங்காயத்தை தூவி கொள்ளுங்கள். எல்லாவற்றையும் வறுத்த பின்பு நீங்கள் அரைத்து வைத்துள்ள பேஸ்டையும் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.

- Advertisement -

மிக்ஸி ஜாரை கழுவிய தண்ணீரை தவிர கூடுதல் தண்ணீர் சேர்க்க வேண்டாம். மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் நன்கு வேக விடுங்கள். தண்ணீர் பற்றி வரும் வரை இடையிடையே கிண்டி விடுங்கள். சிறிது நேரத்திற்குள் தண்ணீர் எல்லாம் வற்றி கெட்டியாக பேனில் ஒட்டாமல் திரண்டு வரும்.

இதையும் படிக்கலாமே:
ஐயர் வீட்டு அவியல் வீட்டில் செய்வது இவ்வளவு சுலபமா? 10 நிமிடத்தில் கல்யாண வீட்டு ஐயங்கார் அவியல் எப்படி செய்வது?

இந்த சமயத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான், இவை ஆறியதும் ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் பத்து நாட்கள் கூட வைத்திருந்து சாப்பிடலாம். இட்லி, தோசை மட்டுமல்லாமல் சூடான சாதத்துடன் அப்படியே பிசைந்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும், இந்த கொத்தமல்லி தொக்கு ரெசிபி நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -