ஐயர் வீட்டு அவியல் வீட்டில் செய்வது இவ்வளவு சுலபமா? 10 நிமிடத்தில் கல்யாண வீட்டு ஐயங்கார் அவியல் எப்படி செய்வது?

aviyal2_tamil
- Advertisement -

கல்யாண வீட்டில் கொடுக்கப்படும் அவியல் யாருக்குத் தான் பிடிக்காது! ரொம்ப சுவையாக இருக்கக் கூடிய இந்த அவியல் ரெசிபி ஹோட்டல் மற்றும் கல்யாண வீடுகளில் மட்டுமே அதிகம் சாப்பிட்டு பழகி இருப்போம், ஆனால் நம்முடைய வீட்டிலேயே ரொம்ப சுலபமாக ஐயங்கார் வீட்டு ஸ்டைலில் எப்படி கல்யாண வீட்டு அவியல் தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி அறிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

வாழைக்காய், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், முருங்கைக்காய், சௌசௌ, பூசணிக்காய், அவரைக்காய் – 2 கப், துருவிய தேங்காய் – அரை மூடி, பச்சை மிளகாய் – 4, சீரகம் – ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – ஒன்றரை டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, தயிர் – கால் கப், உப்பு – தேவையான அளவு. பால் – 1 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

முதலில் அவியல் செய்ய தேவையான கலவை காய்கறிகளை உங்கள் விருப்பம் போல தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மேற்கூறிய இந்த எட்டு காய்கறிகளில் நீங்கள் உங்களிடம் இருப்பதை வைத்து செய்யலாம். ரெண்டு கப் வரும் அளவிற்கு இந்த காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து கழுவி நீளவாக்கில் குச்சி குச்சியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து முக்கால் பதம் வேகும் அளவிற்கு 5 நிமிடம் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகிய இந்த மூன்றையும் சேர்த்து நன்கு நைசாக கெட்டியான திக் பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு தேங்காய் எண்ணெய் விட்டு காய விடுங்கள். அவியல் செய்யும் பொழுது தேங்காய் எண்ணெய் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

- Advertisement -

எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும், கொஞ்சம் சீரகம், ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். தாளித்ததும் நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து கொதிக்க விட வேண்டும். ஒரு கொதி வந்ததும் தயிர் சேர்த்து கலந்து விடுங்கள். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு பால் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் மட்டும் சேர்த்தால் சீக்கிரம் புளித்து விடும். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
பாசிப்பருப்புல ஒரு முறை இப்படி ரசம் வச்சு பாருங்க. சாப்பாடு கூட வேண்டான்னு வெறும் ரசத்தையே குடிப்பாங்க. அவ்வளவு டேஸ்டா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

ஒரு ரெண்டு நிமிடம் நன்கு கலந்து விட்ட பிறகு நீங்கள் அவித்து வைத்துள்ள அவியல் காய்கறிகளை இதனுடன் சேர்த்து கலந்து விடுங்கள். இப்போது ஐந்து நிமிடம் நன்கு எல்லாவற்றுடன் கலந்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான், ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கக்கூடிய இந்த ஐயங்கார் வீட்டு அவியல் ரெசிபி இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க.

- Advertisement -