- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வெறும் 1 நிமிடத்தில் ஊறுகாயா! அதுவும் கொத்தமல்லி தழையை வைத்தா? இந்த ரெசிபி பழைய பாட்டிகளுக்கு...

வெறும் 1 நிமிடத்தில் ஊறுகாயா! அதுவும் கொத்தமல்லி தழையை வைத்தா? இந்த ரெசிபி பழைய பாட்டிகளுக்கு மட்டும் தான் தெரியும். நீங்க மிஸ் பண்ணிடாதீங்க.

- Advertisement -

ஆந்திரா ஸ்டைல கொத்தமல்லி தழையை வைத்து சூப்பரான ஒரு ஊறுகாய் எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகின்றோம். இதை ஊறுகாய் என்றும் சொல்லலாம். அல்லது காரசாரமான துவையல் என்றும் சொல்லலாம். இட்லி, தோசை சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம். சுட சுட சாதத்தில் காரசாரமான இதை போட்டு பிசைந்து சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்ட் இருக்கும். ஆனா கண்டிப்பா இதுல நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடணும். அப்போதுதான் வயிற்றுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. இதுவரைக்கும் நீங்க தெரிஞ்சுக்காத வேற லெவல் டிஷ். மிஸ் பண்ணாம தெரிஞ்சிக்கோங்க. வாங்க ரெசிபியை பார்க்கலாம்.

அழுத்தமாக ஒரு பெரிய கைப்பிடி அளவு கொத்தமல்லி தழைக்கு பின் சொல்லக்கூடிய அளவுகள் சரியாக இருக்கும். கொத்தமல்லி தழைகளை எடுத்து சுத்தம் செய்து கொஞ்சம் பொடியாக நறுக்கி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடுகு – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். முதலில் கடுகு வெந்தயம் பாதி அளவு வறுபட்டு வந்தவுடன், இறுதியாக சீரகம் போட்டு வறுத்து, தனியாக ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஆற வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பொடியும் அப்படியே இருக்கட்டும்.

அடுத்து கடாயில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வர மிளகாய் – 8, போட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக சுத்தம் செய்து நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி தழைகளை போட்டு இரண்டு நிமிடம் போல வதக்கி இதையும் தனியாக எடுத்து விடுங்கள். அதே கடாயில் பெரிய நெல்லிக்காய் அளவு ஊறவைத்த புளியை ஊற்றி இரண்டு நிமிடம் பச்சை வாடை போட கொதிக்க விட்டு, அதையும் எடுத்துக் கொள்ள வேண்டும் (ஊற வைத்த புளிக்கரைசல் அல்ல. ஊற வைத்த புளியை அப்படியே போட வேண்டும்.)

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்திருக்கும் வர மிளகாய், கொத்தமல்லி தழை, புளி இந்த மூன்றையும் ஒன்றாக போட்டு தேவையான அளவு உப்பு போட்டு இதை தொக்கு போல அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் அடுப்பில் கடாய் வைத்து இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன், வர மிளகாய் – 1, கருவேப்பிலை, தாளித்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் இந்த கொத்தமல்லி விழுதை தாளிப்பில் கொட்டி நன்றாக பிரட்டி விட வேண்டும். இறுதியாக கடுகு வெந்தயம் சீரகம் சேர்த்த பொடி அரைத்து வைத்திருக்கின்றோம் அல்லவா, அதையும் இந்த கடாயில் இருக்கும் கொத்தமல்லி ஊறுகாயோடு சேர்த்து நன்றாக பிரட்டி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இது கொஞ்சம் புதுசு! கடலைப்பருப்பே இல்லாமல் மசால் வடை. அதுவும் உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியம் தரும் 2 பொருள் சேர்த்த வடை இது.

ஊறுகாயில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் சுண்டி வந்தவுடன், அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் இதை சாப்பிட்டால் காரமும் புளிப்பும் கொத்தமல்லி வாடையும் தூக்கலாக இருக்கும். செம டேஸ்ட் போங்க. செய்யும் போதே நாக்கு ஊறும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்