தினமும் காலையில் ஒரு கப் மட்டும் இதை குடிச்சு பாருங்க, அந்த நாள் முழுக்க பறந்து பறந்து வேலை செஞ்சா கூட கொஞ்சம் கூட டயர்ட் ஆகவே மாட்டீங்க.

wheat kanji
- Advertisement -

இப்போதெல்லாம் நம்மிடையே ஓரளவுக்கு இந்த உணவை பற்றிய விழிப்புணர்வு அதிகமாகவே வந்து விட்டது. முன்பெல்லாம் ஏதோ ஒன்று கிடைத்தது என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த நமக்கு இப்போது உணவின் மூலமாகத் தான் நமக்கு நோயும் வருகிறது, அதை உணவின் மூலம் தான் சரி செய்யவும் முடியும் என்ற புரிதல் வந்து விட்டது. இந்த சமையல் குறிப்பு பதிவில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு சுவையான கஞ்சியை எப்படி செய்வது என்று தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த கஞ்சி செய்வதற்கு முதலில் ஒரு கப் கோதுமை ரவை, இரண்டு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு இரண்டையும் நன்றாக சுத்தம் செய்து குக்கரில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கப் கோதுமை ரவைக்கு நான்கு கப் தண்ணீர் சேர்த்து கால் டீஸ்பூன் உப்பும் சேர்த்து குக்கரை மூன்று விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இது அப்படியே விசில் இறங்கி இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்ததாக இந்த கஞ்சி செய்ய ஒரு வெங்காயம் ஒரு தக்காளி இரண்டு பச்சை மிளகாய் ஐந்து பீன்ஸ் ஒரு கேரட் இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு கைப்பிடி புதினா கொத்தமல்லி இவைகளையும் பொடியாக நறுக்கி தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான உடன் நறுக்கி வைத்த வெங்காயத்தை முதலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்து பச்சை மிளகாய் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து லேசாக வதங்கிய பிறகு நறுக்கி வைத்து காய்கறிகள் தக்காளி, புதினா சேர்த்த பிறகு தக்காளியை குழைய வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி காய் வேக கால் டீஸ்பூன் உப்பையும் சேர்த்து மூடி போட்டு வேக விடுங்கள். இரண்டு நிமிடம் வரை காய்கள் வெந்தால் போதும். இத்துடன் நாம் ஏற்கனவே வேக வைத்திருக்கும் கோதுமை ரவை கஞ்சி இதில் சேர்த்து ஐந்து நிமிடம் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லியை மேலே தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். சுவையான கோதுமை ரவை கஞ்சி தயார்.

இதையும் படிக்கலாமே: ஸ்பெஷல் மைசூர் போண்டா ரெசிபி செய்முறை

காலை வேளையில் நாம் எப்போதும் போல இட்லி தோசை என உண்ணாமல் இது போன்ற சத்து மிகுந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டால் அன்று நாள் முழுவதும் உங்களுக்கு வேலை செய்யும் அலுப்பே தெரியாத அளவிற்கு உடல் நல்ல புத்துணர்ச்சியுடன் இருக்கும். நீங்களும் இந்த கஞ்சியை ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க.

- Advertisement -