ஃபேமஸான மொறு மொறு மைசூர் போண்டாவின் ரகசியம் இதுதானா? இப்படி புசுபுசுன்னு, சுட சுட போண்டா சுட்டு கொடுத்தால் 10 போண்டா சாப்பிட்டாலும் பத்தாதே.

bonda3_tamil
- Advertisement -

போண்டா என்றாலே எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். அதிலும் இந்த பஞ்சு போல மைசூர் போண்டா என்றால் எல்லோருமே விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். மேலே மொறுமொறுப்பாக, உள்ளே பஞ்சு போல, சுட சுட மைசூர் போண்டா எப்படி செய்வது என்பதை பற்றிய பதிவுதான் இது. ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த போண்டாவை சுடச்சுட செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 10 போண்டா இருந்தாலும் மீதம் வைக்காமல் சாப்பிடுவாங்க. பலவிதமான போண்டாக்கள் இருக்க இந்த மைசூர் போண்டாவில் அப்படி என்ன ஸ்பெஷல். வாங்க ரெசிபியை படித்து தெரிந்து கொள்வோம்.

செய்முறை

இந்த மைசூர் போண்டாவை மைதா மாவை வைத்து தான் செய்யப் போகின்றோம். வாங்க தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்த்து விடுவோம். ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் புளித்த தயிர் – 1/2 கப், ஆப்ப சோடா – 1/4 ஸ்பூன், போட்டு ஒரு விஸ்கை வைத்து நன்றாக அடித்து கலக்க வேண்டும். 2 நிமிடம் அடித்து கலக்கினால் இந்த தயிரில் நுறை பொங்கி வரும். அது சரியான பக்குவம்.

- Advertisement -

நன்றாக அடித்து வைத்திருக்கும் நுறை வந்த தயிரில் மைதா மாவு – 3/4 கப், அரிசி மாவு – 1/4 கப், தேவையான அளவு – உப்பு, சீரகம் – 1/2 ஸ்பூன் போட்டு மீண்டும் நன்றாக கலந்து விட வேண்டும். தேவைக்கு ஏற்ப தண்ணீரை ஊற்றி மாவை நன்றாக கட்டிகள் இல்லாமல் கலந்து போண்டா மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். மாவு கொஞ்சம் திக்காக இருக்கட்டும். அவ்வளவு தான். இதை மூடி போட்டு 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மாவு எவ்வளவு ஊறுகிறதோ அந்த அளவுக்கு போண்டா புசுபுசுவென சூப்பராக வரும்.

சாயங்காலம் போண்டா செய்வதாக இருந்தால் மத்தியானமே இந்த மாவை கரைத்து தயாராக எடுத்து வைத்து விடுங்கள். குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தவுடன் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான போண்டா தயாராகும். மாவு மூன்று மணி நேரம் நன்றாக ஊறிய பிறகு இந்த மாவில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது, போட்டு மீண்டும் அந்த மாவை இரண்டு நிமிடம் போல கலந்து விடுங்கள்.

- Advertisement -

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் இருந்து 2 ஸ்பூன் சுடு எண்ணெயை மட்டும் எடுத்து இந்த மாவில் விட்டு ஒரு முறை கலந்து கொள்ளுங்கள். மாவு தயார். இந்த மாவை உங்கள் கையாலேயே கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சுட சுட இருக்கும் எண்ணெயில் விட்டு பொரித்து எடுத்தால் புசுபுசுவென பொங்கி போண்டா சிவந்து அப்படியே சூப்பரா வரும் பாருங்க. சான்சே இல்லைங்க. வேற லெவல் டேஸ்ல போண்டா கிடைத்திருக்கும்.

இதையும் படிக்கலாமே: ரோட்டு கடை ஸ்பெஷல் சால்னா செய்முறை:

இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி கார சட்னி வைத்து பரிமாறுங்கள். அவ்வளவு சுவை இருக்கும். மைதா மாவில் செய்த போண்டா என்பதால் இதை சூடாக இருக்கும் போதே சாப்பிட்டு விட வேண்டும். கொஞ்சம் ஆறிவிட்டால் ஜவ்வு போல போண்டா இழுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு தாங்க. இந்த சுவையான மைசூர் போண்டா ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -