கோவிலில் கொடுப்பது போலவே ருசியான ‘வெண் பொங்கலை’ நம் வீட்டிலேயே ஈஸியாக 10 நிமிடத்தில் எப்படி செய்வது?

pongal-temple

கோவிலில் கொடுக்கப்படும் வெண் பொங்கல் நாம் வீட்டில் செய்யும் வெண் பொங்கலை விட மிகவும் ருசியாக இருக்கும். அதில் அவ்வளவாக எதுவும் பெரிதாக பொருட்களும் கூடுதலாக சேர்த்திருக்க மாட்டார்கள். நாம் வீட்டில் செய்வது போலவே தான் இருக்கும். ஆனாலும் கோவிலில் வீட்டில் செய்வதை விட ருசியாக எப்படி செய்கிறார்கள்? நம்முடைய வீட்டிலேயே மிக எளிமையான முறையில் வெண் பொங்கல் கோவில் பொங்கலை போலவே எப்படி செய்வது? என்பது தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ven-pongal

கோவில் ‘வெண் பொங்கல்’ செய்வதற்கு தேவையான பொருட்கள்:
பச்சரிசி – ஒரு கப்
சிறு பருப்பு – கால் கப்
இஞ்சி – ஒரு துண்டு
சீரகம் – ஒரு டீஸ்பூன்

மிளகு – ஒரு டீஸ்பூன்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 5
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
தண்ணீர் – 41/2 கப், கறிவேப்பிலை கொத்து.

ven-pongal1

கோவில் ‘வெண் பொங்கல்’ செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் பச்சரிசி மற்றும் கால் கப் சிறு பருப்பை அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பேன் வைத்து கொள்ளுங்கள். லேசாக சூடு ஏறியதும் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து 2 நிமிடம் வதக்கி எடுக்க வேண்டும். அரிசியை நேரடியாக அப்படியே நாம் பயன்படுத்துவதை விட, இப்படி நாம் வதக்கி சேர்க்கும் பொழுது தான் வெண் பொங்கல் கூடுதல் ருசியைக் கொடுக்கும்.

- Advertisement -

அதன் பின்னர் ஒருமுறை அவற்றை அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் குக்கரில் நான்கரை(41/2) டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதில் அலசிய அரிசி மற்றும் பருப்பை சேர்த்து கொள்ளுங்கள். ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய் அல்லது எண்ணெய் சேர்த்து குக்கரை மூடி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மூன்றிலிருந்து நான்கு விசில் விட்டு எடுக்க வேண்டும். அதற்குப் பிறகு தாளிக்க தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ven-pongal2

மிளகு மற்றும் சீரகத்தை இஞ்சி பூண்டு இடிக்கும் குலவையில் போட்டு நன்கு ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டும். இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலையை உருவி தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தாளிப்பு கரண்டியில் 3 தேக்கரண்டி அளவிற்கு நெய்யை ஊற்றிக் கொள்ளுங்கள். நெய் லேசாக சூடு ஆறியதும் அதில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ven-pongal3

பின்னர் மிளகு, சீரகம், முந்திரி பருப்பு, கறிவேப்பிலை என்று வரிசையாக சேர்த்துக் கொள்ளுங்கள். தாளிப்பு அடங்கியதும் தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குக்கரை திறந்து பார்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து விட்டு கொள்ளுங்கள். அதனுடன் இந்த தாளித்த பொருட்களை சேர்த்து சிறிதளவு நெய்விட்டு அடிப் பகுதியிலிருந்து நன்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க மிக மிக ருசியான கோவிலில் கொடுக்கும் வெண் பொங்கலே தோற்றுப் போகும் அளவிற்கு நீங்களே உங்கள் கைகளால் ருசியாக செய்து விடலாம்.

ven-pongal4

பொங்கலை பொறுத்தவரை தாளித்த பிறகு குக்கரை மூடி வைப்பதை விட அரிசி, பருப்பு வெந்து எடுத்த பிறகு தாளித்துக் கொட்டி சேர்ப்பது தான் ருசியைக் கொடுக்கும். அது போல் அரிசி பருப்பை வறுத்து சேர்த்தால் தான் கோவிலில் கொடுப்பது போல மிகவும் சுவையானதாக இருக்கும். நீங்களும் உங்களுடைய வீட்டில் செய்து பார்த்து அனைவரையும் அசத்தி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்ல ரவை இருக்கா? ஒருவாட்டி ‘ரவா புட்டிங் கேக்’ நீங்களே ட்ரை பண்ணி பாக்கலாமே! இதுக்கு ஓவன் கூட தேவையில்லை. இட்லிசட்டி இருந்தாலே போதும்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.