உங்க வீட்ல ரவை இருக்கா? ஒருவாட்டி ‘ரவா புட்டிங் கேக்’ நீங்களே ட்ரை பண்ணி பாக்கலாமே! இதுக்கு ஓவன் கூட தேவையில்லை. இட்லிசட்டி இருந்தாலே போதும்.

cake4
- Advertisement -

ரவையை வைத்து நம்முடைய வீட்டிலேயே ரவா புட்டிங் கேக் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்கு ஓவன் கூட தேவையில்லை. நம் வீட்டில் இருக்கும் இட்லி பாத்திரத்தில் வைத்து, நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்தவுடன் அப்படியே வெண்ணைப் போல கரையும் இந்த கேக்கை யாரும் மிஸ் பண்ணிடாதிங்க. ட்ரை பண்ணி பாருங்க. சரி, சுவையான சூப்பரான அந்த கேக் எப்படி செய்யறது பார்க்கலாம் வாங்க!

cake2

இந்த கேக்குக்கு தேவையான கேராமல் முதலில் தயார் செய்து வைத்துக் கொள்வோம். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை – 1/2 கப் (100 கிராம்) போட்டுக்கொள்ள வேண்டும். 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து சர்க்கரையை, தண்ணீரோடு கலந்து கொண்டு வந்தால், சர்க்கரை பாகு கலருக்கு வரும். அதை ஒரு கேக் ட்ரே அல்லது சில்வர் பாத்திரத்தில் ஊற்றி, தடவி அப்படியே வைத்து விடுங்கள். இது அப்படியே இருக்கட்டும். இந்த கேரமல் ஆறினாலும் பரவாயில்லை.

- Advertisement -

அடுத்தபடியாக ரவா புட்டிங் எப்படி செய்வது என்பதை பார்த்துவிடுவோம். இதற்கு தேவையான பொருட்கள். தண்ணீர் கலக்காத திக்கான பால் – 1/2 லிட்டர், சர்க்கரை – 100 கிராம், உப்பு இல்லாத வெண்ணை – 2 ஸ்பூன், ரவை – 40 கிராம். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, தயாராக இருக்கும் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வரும் சமயத்தில் 2 டேபிள்ஸ்பூன் அளவு வெண்ணெயை சேர்த்து நன்றாக கரைத்து விட வேண்டும்.

cake3

அதன் பின்பு வறுக்காத ரவையை சேர்த்து கலந்து விடுங்கள். ரவை ஐந்திலிருந்து ஏழு நிமிடத்திற்குள் நன்றாக வெந்திருக்கும். ரவை வெந்ததும், நீங்கள் சைவமாக இருந்தால் இந்த இடத்தில் 1 ஸ்பூன் அளவு கஸ்டர்ட் பவுடரை (custard powder) கடாயில் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விட வேண்டும். இது அப்படியே கொஞ்ச நேரம் ஆறவிடுங்கள்.

- Advertisement -

உங்களுக்கு முட்டை சாப்பிடும் பழக்கம் இருந்தால் கஸ்டர்ட் பவுடரை சேர்க்க தேவை கிடையாது. தனியாக ஒரு அகலமான பாத்திரத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும். அடுத்தபடியாக அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்திருக்கும் கலவையை எடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக முட்டையில் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். (பாலுடன் வெந்திருக்கும் ரவையை எடுத்துதான் முட்டை இருக்கும் பாத்திரத்தில் ஊற்றி கலக்கவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் முட்டையை எடுத்து ரவா புட்டிங்கில் ஊற்றி கலந்தால் சரிவராது.)

cake6

இப்போது முதலில் கேரமல் ஊற்றி தயாராக எடுத்து வைத்திருக்கும் பாத்திரம் இருக்கும் அல்லவா? அந்த பாத்திரத்தில் முட்டையோடு சேர்த்து கலக்கிய ரவை புட்டிங் கலவையை ஊற்றி, ஒரு மூடி போட்டு, மூடி விட வேண்டும். இப்போது இட்லி பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு, மேலே கலவையை வைத்து அதன் பின்பு கிண்ணத்தை உள்ளே வைத்து, ஆவியில் 30 லிருந்து 35 நிமிடங்கள் வரை வேக விடுங்கள்.

- Advertisement -

cake

மிதமான தீயில். புட்டிங்கை ஊற்றி வைத்திருக்கும் பாத்திரத்தின் அடிப் பக்கத்தில், இட்லி பாத்திரத்தில் வைத்து இருக்கும் தண்ணீர் பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

cake5

35 நிமிடங்கள் கழித்த பின்பு, ஒரு ஸ்பூன் அல்லது கத்தியை வைத்து லேசாக கேக்கின் உள்ளே குத்தி பார்த்தால், அந்த ஸ்பூனில் கேக் ஒட்டாமல் வரவேண்டும். அடுப்பிலிருந்து இறக்கி, சிறிது நேரம் ஆற வைத்து விட்டு, ஒரு தட்டில் தலைகீழாக வைத்து எடுத்தீர்கள் என்றால், அழகான புட்டிங் கேக்கிடைத்திருக்கும்.

cake7கத்தியை வைத்து வெட்டி பரிமாறி சாப்பிட்டுப் பாருங்கள். அவ்வளவு சுவையாக, அவ்வளவு ஜூஸியாக தொண்டையில் இறங்குவதே தெரியாது. உங்களுக்கு பிடித்து இருந்தால் கட்டாயம் உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாக்கணும்.

இதையும் படிக்கலாமே
சமையலறையில் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய இந்த 2 பொருட்களை தினமும் முகத்தில் தடவி வந்தாலே போதும். உங்கள் முகமும் வெள்ளையாக மாறி பளபளப்பாக ஜொலிக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -